வேடசந்தூர் அருகே சுற்றுலா வேன் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பூசாரி கவுண்டன்பட்டியை சேர்ந்த 22 விவசாயிகள், ஆடி அமாவாசையை முன்னிட்டு கிடா வெட்டுவதற்காக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள நாத்த்ராயன் கோயிலுக்குச் சுற்றுலா வேனில் புறப்பட்டனர். இந்த வேனை ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். […]

பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூ.5.9 கோடிக்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரைப்படத்திற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திருப்பி தருமாறு நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் பி.லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு […]

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 188 பயணிகளுடன் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு நேற்று காலை 9 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்டுச்சென்ற 2 மணி நேரத்தில் நடுவானில் பறந்தபோது அதில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து […]

2026 தேர்தல் திமுக வரலாற்றில் ஒரு மோசமான தேர்தலாக இருக்கும் என முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. மறுபுறம் அதிமுகவுடன் பாஜக […]

இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் கூலி திரைப்படத்தின் மோனிகா பாடல் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பரியேறும் பெருமாள். முதல் படத்திலேயே சாதிய ஒடுக்குமுறைகளை எடுத்துக் காட்டி கவனம் ஈர்த்தார். இதையடுத்து, நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். அப்படத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை கோடிட்டு காட்டி இருந்தார். பின்னர் […]