இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் என்பது பெரியவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்சனை என்ற நிலை மாறி, சிறு குழந்தைகளையும் பாதிக்கும் ஒரு தீவிர ஆரோக்கிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை காரணமாகப் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொலஸ்ட்ரால் வெளிப்புற அறிகுறிகள் எதையும் உடனடியாகக் காட்டாது என்பதால், பெற்றோர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் […]

இன்றைய நவீன காலகட்டத்தில் தலைமுடியை விரைவாக உலர வைப்பதற்காக ‘ஹேர் ட்ரையர்’ உள்ளிட்ட பல்வேறு நவீன உபகரணங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும், இவற்றின் தொடர் பயன்பாட்டால் முடி வறட்சி, தீவிர முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பல சிக்கல்களைத் தினமும் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால், எந்தவித ரசாயன சாதனங்களும் இல்லாத அக்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களின் கூந்தலை எவ்வாறு அடர்த்தியாகவும் கருகருவென ஆரோக்கியமாகவும் பராமரித்தார்கள் என்பதில் தான் […]

ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாடுகளும், ஆன்மீக விசேஷங்களும் நிறைந்து காணப்படும் ஒரு புனிதமான மாதமாகும். இந்த மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகின்றன. குறிப்பாக, ஆடிச் செவ்வாயன்று பெண்களால் மட்டுமே பிரத்யேகமாகக் கடைப்பிடிக்கப்படும் “ஔவையார் விரதம்” மிகவும் பிரசித்தி பெற்றது. தெய்வப்புலவர் அவ்வையாரையும், விநாயகப் பெருமானையும் போற்றும் வகையில் பின்பற்றப்படும் இந்த வழிபாட்டு முறை, ‘பாட்டி வழிபாடு’ என்றும் ‘செவ்வாய்ப் பிள்ளையார் விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. […]

தமிழ் பண்பாட்டில் விசேஷ நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் தலைக்குக் குளிப்பதை ஒரு முக்கிய சடங்காகவே நம் முன்னோர்கள் பின்பற்றி வந்துள்ளனர். திருமணம், பிறந்தநாள், வீட்டின் கிரகப்பிரவேசம், விரத நாட்கள் மற்றும் கோவில் வழிபாடுகளுக்கு முன்பாக முழுமையாக நீராடுவது என்பது வெறும் வெளிப்புற உடலைச் சுத்தம் செய்யும் முறை மட்டுமல்ல; அது ஆன்மீக மற்றும் அறிவியல் சார்ந்த பல நன்மைகளைக் கொண்ட ஒரு வாழ்க்கை நெறியாகும். முன்னோர்களின் வழிகாட்டலின்படி, தூய்மை என்பது […]

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த ஜூலை 23ஆம் தேதி, 8ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு Good Touch and Bad Touch குறித்த விழிப்புணர்வு வகுப்பை ஆசிரியை ஒருவர் நடத்தியுள்ளார். வகுப்பின் போது, “யாருக்கேனும் இதுபோன்று அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் பயப்படாமல் என்னிடம் தெரிவிக்கலாம்” என்று ஆசிரியை நம்பிக்கை அளித்துள்ளார். வகுப்பு முடிவடைந்ததும், 13 வயது சிறுமி ஒருவர் கண்ணீருடன் ஆசிரியையை அணுகி […]

பிரபல யூடியூபரான இர்பான், கடந்த 2024-ஆம் ஆண்டு தனது மனைவி ஆசிபா கர்ப்பமாக இருந்தபோது துபாய்க்கு அழைத்துச் சென்று பாலின நிர்ணயப் பரிசோதனை செய்தார். பின்னர் அங்கு வைத்து தனக்குப் பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்ததோடு, அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்திலும் பதிவேற்றினார். இந்தியாவில் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவதும், அதை வெளிப்படுத்துவதும் சட்டப்படி குற்றம் என்பதால், இர்பானின் இந்தச் செயல் பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. […]

கடந்த 2025ஆம் ஆண்டு கரூரில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதையும் உலுக்கிய இச்சம்பவம் குறித்து தற்போது சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை சமீபத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் […]

சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மீது தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது வேட்புமனுவில், திமுக அறக்கட்டளை மற்றும் சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கறிஞர் திருஞானசம்பந்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் விதிகள் படி, வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் அறக்கட்டளை தொடர்புகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். ஆனால், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், திமுக அறக்கட்டளை பற்றிய தகவல்களை வேட்புமனுவில் […]

அரசுப் போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 2024ம் ஆண்டு பொதுத்தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. சமீப காலமாக வினாத்தாள் கட்சி விவகாரம் பூதாகரமாகி வந்த நிலையில், இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த சட்ட திருத்த மசோதா லோக்சபாவில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் இச்சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. […]

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்தப் போவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற இக்கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் கோழி உற்பத்தியாளர்களின் நடைமுறைகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வழக்கமாகச் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் கறிகோழிகளுக்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பது முக்கிய நெறிமுறையாகும். ஆனால், உற்பத்தியாளர்கள் இந்த விதியைப் […]