சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் விதி சார்ந்த அறிவிப்புகளுக்கு முறைப்படி சபாநாயகர் அனுமதி வழங்கும் முன்பாக, அவற்றை சமூக வலைதளங்களிலோ அல்லது செய்தி ஊடகங்களிலோ வெளியிடக் கூடாது என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், ஊடகங்களுக்கும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். சட்டமன்றத்தில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர், பேரவை விதி 55 மற்றும் 56 ஆகியவற்றின் கீழ் அளிக்கப்படும் அறிவிப்புகள் சட்டசபை செயலாளர் அல்லது பேரவை தலைவரால் பரிசீலிக்கப்பட்டு, அனுமதி […]
தமிழ்நாடு – கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனையால், நடப்பாண்டிலும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காகவும், ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 வரை 137 நாட்களுக்குக் கால்வாய் பாசனத்திற்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கர்நாடக அணைகளில் இருந்து உரிய நீர் பங்கு வழங்கப்படாததால் நீர் […]
திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடுகள் தலைவிரித்தாடியதாகவும், கல்வி நிறுவனம் நடத்தி வரும் தன்னிடமே கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறப்பட்டதாகவும் நிதி அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சட்டமன்றத்தில் உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வியின் தரம் குறித்துப் பேசிய அவர், வெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்துவது பெருமையாகாது என்றும், கல்வியின் தரமே மிக முக்கியமானது என்றும் குறிப்பிட்டார். முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து […]
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் தீவிர அரசியலில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். அண்மை காலமாக தனது ரசிகர் மன்றங்களை வெறும் திரைப்பட கொண்டாட்டங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், தீவிரமான சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதை தொடர்ந்து, இந்த அரசியல் வருகை குறித்த தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். முதல், அண்மையில் தனது மக்கள் இயக்கத்தை பல […]
சென்னை பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் அறிவித்துள்ள முடிவு, ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அற்ப அரசியல் லாபங்களுக்காக தமிழகத்தின் தொலைநோக்கு நலன்களை அடகு வைக்கக் கூடாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் விவாதிக்கவோ தங்களது கருத்துகளைப் […]
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் மஹ்மூதாபாத் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், பகலில் கணவருடனும் இரவில் காதலனுடனும் ஒரே வீட்டில் இணைந்து வாழ அனுமதி கோரி காவல் நிலையத்தில் வைத்த விசித்திரமான கோரிக்கை அங்கிருந்த போலீசாரையே நிலைகுலைய வைத்துள்ளது. சுபம் வர்மா என்பவருக்கும் அஞ்சு வர்மா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அஞ்சுவிற்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நிதின் விஸ்வகர்மா என்ற வாலிபருடன் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசினார். அப்போது பேசிய அவர், “தான் ரூ.4 கோடிக்கு வீடு வாங்கியதாக பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருபவர்களுக்கு பகிரங்க சவால் விடுகிறேன். அத்தகைய வீட்டின் பத்திரத்தை யார் நேரில் கொண்டு வந்து காண்பிக்கிறார்களோ, அவர்களுக்கே அந்த வீட்டை பரிசாக முழு மனதுடன் அன்பளிப்பாக வழங்குவதாக தெரிவித்தார். தாங்கள் தீவிரமாக மக்கள் பணியாற்றுவதற்காக […]
‘கடன் வாங்குவதும் தவறு, கடன் கொடுப்பதும் தவறு’ என்பது முன்னோர்களின் அனுபவ மொழியாக இருந்தாலும், தற்காலப் பொருளாதார சூழலில் கடன் பெறாமல் வாழ்வது பலருக்கும் சவாலான ஒன்றாகவே மாறியுள்ளது. அவசரத் தேவைகளுக்காகப் பணத்தை மட்டுமின்றி, அன்றாட பயன்பாட்டுப் பொருட்களையும் பிறரிடம் இருந்து இரவலாகப் பெற்றுப் பயன்படுத்துவது இயல்பான பழக்கமாகிவிட்டது. எனினும், பயன்படுத்திய பின் திருப்பி ஒப்படைத்தாலும் கூட, சில குறிப்பிட்ட பொருட்களைக் கடனாக வாங்கிப் பயன்படுத்துவது கடுமையான தோஷங்களையும் எதிர்மறை […]
சிவபெருமானை நோக்கியவாறு நந்தி வீற்றிருப்பது மரபு என்றாலும், மற்ற ஆலயங்களின் வாகன அமைப்பில் இருந்து மாறுபட்டு, கோவில் நுழைவு வாசலிலும் நந்தி தேவர் சிலை அமைக்கப்பட்டிருப்பது ஆழ்ந்த ஆன்மிக மற்றும் தத்துவ முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனந்தத்தை அருள்பவராகவும், சிவகணங்களின் தலைவராகவும் போற்றப்படும் நந்தி பெருமான், சிவபெருமானின் முதன்மை வாயிற்காவலராகவும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த யோக குருவாகவும் சாஸ்திரங்களில் போற்றப்படுகிறார். சிலாத முனிவரின் தவத்தின் பயனாக யாக பூமியில் தோன்றி, தனது […]
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். தஞ்சையில் விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தான் நடத்திய போராட்டத்தின்போது டம்மி முதல்வர் என விமர்சித்ததற்கு அமைதி காத்த அரசு, காவிரி விவகாரத்தில் தண்ணீர் வரவில்லை எனக் கூறியதும் கோபமடைந்து தன்னைக் கைது செய்ததாக உதயநிதி தெரிவித்தார். பின்னர் வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியதோடு, ‘உதயநிதியை கைது செய்யவில்லை; விசாரித்து அனுப்புகிறோம்’ […]

