நமது இல்லங்களில் பொருட்களை வைக்கும் விதம் மற்றும் அவற்றை பராமரிக்கும் முறையை பொறுத்தே வீட்டை சுற்றி நேர்மறை மற்றும் எதிர்மறை அதிர்வலைகள் உருவாகின்றன. குறிப்பாக, பணத்தையும் விலைமதிப்பற்ற பொருட்களையும் பாதுகாப்பாக வைக்கும் பீரோவை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வாஸ்து மற்றும் ஆன்மீக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், வீட்டில் செல்வம் தங்குவதற்கும் லட்சுமி கடாட்சம் பெருகவதற்கும் பீரோவில் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து காண்போம். […]

ஒவ்வொரு மனிதனின் மனதிலும் தனது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும், என்னென்ன திருப்புமுனைகள் நிகழும் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே இருப்பது உண்டு. ஆனால், தோன்றும் நேரத்திலெல்லாம் ஜாதக கணிப்புகளைத் தேடிச் செல்வதை விட, அதற்கென ஜோதிட சாஸ்திரத்தில் வரையறுக்கப்பட்டுள்ள உரிய தருணங்களில் அணுகுவதே சரியான வழிகாட்டலாக அமையும். எப்போது பார்க்க வேண்டும்? ஜாதகம் என்பது ஒருவரின் வாழ்வியலுக்கான வழிகாட்டி மட்டுமே. வாழ்வின் முக்கியமான தருணங்களான திருமணம், புதிய […]

தற்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகான குழந்தை பேற்றை தள்ளிப்போடும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக கருவுறுதலில் பல்வேறு சவால்களும் உருவாகி வருகின்றன. தாமதமான திருமணம், சீரற்ற வாழ்வியல் பழக்கவழக்கங்களால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் மற்றும் திட்டமிட்டு கருவுறுதலை தள்ளிப்போடுவது போன்றவை இதன் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. எனினும், ஆரோக்கியமான உணவு முறை, மிதமான உடற்பயிற்சி மற்றும் உடல் எடையை சீராக பராமரிப்பது ஆகியவற்றின் மூலம் […]

உணவு அருந்திய பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலில் பல்வேறு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார சிக்கல்களை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது பொதுவான பரிந்துரையாக உள்ளது. எனினும், பணிச்சுமை காரணமாக பலருக்கும் காலையில் இதற்கான நேரம் […]

மதுரையில் நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. முதல்வர் விஜய்யின் நெருங்கிய தோழியாகவும் அறியப்படுகிறார். சமீப காலமாகவே இவர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் த்ரிஷா போட்டியிடுவார் என்றும் உறுதி படுத்தாத […]

மேற்கு வங்கத்தில் கேஸ் சிலிண்டர் மானிய தொகையை சரிபார்க்க வங்கிக்கு சென்ற ஏழை பெண்ணின் கணக்கில் சுமார் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் குல்தாலி பகுதியை சேர்ந்தவர் காஷ்மீரா ஷேக். ஜரி தையல் தொழில் செய்து வரும் இவர், மிகவும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர். இந்நிலையில், மத்திய அரசின் சமையல் […]

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் புதிய ‘மில்க் ரஸ்க்’ விற்பனையை மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் பால் வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சீராக விநியோகித்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக பால் மட்டுமின்றி பால்கோவா, பாதாம் […]

தென் கடலோரத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கடலோர தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், வட தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், புதிய செய்தி தொடர்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அறிவித்துள்ளார். மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த மூத்த தலைவர்களான வைகைச்செல்வன், கலைராஜன், மகேந்திரன், புகழேந்தி மற்றும் அமெரிக்கை நாராயணன் ஆகியோருக்கு தவெகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக பெலிக்ஸ் ஜெரால்ட், வழக்கறிஞர் சத்யகுமார், விக்னேஸ்வரன், […]

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இழுத்தடித்து வரும் கர்நாடக அரசு, தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, காவிரி நதிநீர்ச் சிக்கல் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து சுமுகத் தீர்வு காண்பதற்காக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்திக்க தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக தமிழக அரசு […]