லட்சக்கணக்கில் செலவு செய்து மனதிற்கு பிடித்த மாதிரி வீடு கட்டி குடியேறினால் அத்துடன் வேலைகள் முடிந்ததாக அர்த்தமில்லை. பராமரிப்பு பணிகளை தொடர்ந்து செய்தால் மட்டுமே வீட்டின் ஆயுள் நீடிக்கும். வீட்டிற்குள் எறும்பு, எலி, கட்டெறும்பு, அரணை, புழுக்கள் ஆகியவற்றால் நமக்கு பிரச்னை ஏற்படும். அதிலும் குறிப்பாக கரையான் சுவர், மரப் பொருட்களை அரித்துவிடும். கறையன் தொல்லை …
மெட்டா, இன்ஸ்டாகிராமில் ட்ரையல் ரீல்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்படி பயனர் பதிவிட்ட வீடியோவை பின்தொடராதவர் கூட பார்க்க முடியும், இந்த அம்சம் மே மாதம் சோதனை செய்யப்பட்ட பிறகு இப்போது வெளியிடப்படுகிறது. முற்றிலும் பாதுகாப்பானது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
படைப்பாளிகள் இந்த அம்சத்தைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் தங்கள் வீடியோவைப் பகிர்வதற்கு முன் “சோதனை” …
2000 ரூபாய் கடனுக்காக மனைவியின் மார்பிங் புகைப்படத்தை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அங்காடி திப்பாவை சேர்ந்த நரேந்திரன் என்பவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அகிலாவை காதல் திருமணம் செய்து கொண்ட நரேந்திரன் (25), விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தார். நரேந்திரன் மீனவனாக …
முந்திரி பருப்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் அதே வேளையில், கலப்படம் செய்யப்பட்ட முந்திரி பருப்புகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நிறைய தீங்கு விளைவிக்கும். நார்ச்சத்து, புரதம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பருப்புகள் பல பிரச்சனைகளில் நன்மை பயக்கும். போலி மற்றும் உண்மையான முந்திரி பருப்புகளை எவ்வாறு …
மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது நாட்டின் சாமானிய மக்களுக்கான சிறந்த விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டம் ஒரு வருடத்திற்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படலாம். இது விபத்து காரணமாக இறப்பு அல்லது ஊனத்திற்கான காப்பிட்டை வழங்குகிறது. இங்கு விபத்து என்பது வெளிப்புற காரணங்கள், …
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டதிற்கு 2025 ஜன.13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொது (பல்வகை) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண்: 154 பொது (பல்வகை)த் துறை நாள் : …
நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நடைப்பயிற்சி உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமின்றி உங்களை கட்டுக்கோப்பாக வைக்கிறது. ஆனால் பல சமயங்களில் நடைப்பயிற்சியின் போது சோம்பேறித்தனமாகி நடுவில் விட்டுவிடுவார்கள். உங்கள் நடைப் பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றுவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
ஒரு நேரத்தைத் திட்டமிடுங்கள் : காலையில், மதிய உணவு இடைவேளையின்போது …
யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கும்படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டுமெனவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சிங்கமுத்து தரப்பில் பதில்மனு தாக்கல் …
அவைத் தொடங்கியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி, அவை நடவடிக்கைகளை சீர்குலைத்ததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்யக் கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் …
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் உப கோயில்களில் உதவியாளர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிபணியிடங்கள் ; மொத்தம் 296 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலி பணியிடங்கள் :
இளநிலை உதவியாளர் – 7, சீட்டு விற்பனையாளர் …