கேரள மாநிலம் திருச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய கோர விபத்தில், காரில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளா எம்.பி.யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் துக்குகுடாவில் உள்ள ‘பிரைம் கேர்’ தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் செவிலியர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 34 வயது மெக்கானிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். துக்குகுடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏழு மாதங்களாக செவிலியராக பணியாற்றி வந்தவர் யூகே ஷிரீஷா (21). மருத்துவமனை நிர்வாகம் அருகிலேயே ஏற்பாடு செய்திருந்த தங்குமிடத்தில் சக ஊழியர்களுடன் தங்கி பணிபுரிந்து […]
ஜம்மு காஷ்மீர் பட்காம் மாவட்டம் யூஸ்மார்க் உயரமான மலைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி யாசிர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். யூஸ்மார்க் மலைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த துல்லியமான உளவுத்துறை தகவலை அடுத்து இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் படையினர் இணைந்து அப்பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய […]
சென்னை அடையாறு அடுத்த வண்ணாந்துறையை சேர்ந்தவர் கண்ணன், வயது 45. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதிமுகவில் வட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த இவர், சில மாதங்களுக்கு முன் தவெகவில் இணைந்தார். சனிக்கிழமை இரவு வெளியே சாப்பிட சென்றவர், அங்கிருந்து ராமசாமி அவின்யூவில் உள்ள அவரது அலுவலகத்துக்கு போனார். அப்போது கண்ணன் செல்லும் வழியை நோட்டமிட்ட கும்பல், அலுவலக வாசலில் சுற்றி வளைத்தது. இரண்டு பைக்குகளில் வந்த 6 […]
குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். ஓபிசி மக்களின் உரிமையை காப்பாற்ற நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு தற்போது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை (OBC) கணக்கெடுக்க ‘திறந்தவெளி பதிவு முறையை’ (Open-ended format) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். […]
தற்கால அவசர மற்றும் இயந்திர வாழ்க்கையில், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த அழுத்தத்தில் இருந்து விடுபடவும், வார இறுதி விடுமுறை நாட்களை புத்துணர்ச்சியுடன் கழிக்கவும் பலரும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு மலையேற்றம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மலையேற்ற பிரியர்களின் விருப்ப பட்டியலில் முதலிடம் பிடித்து […]
நவீன உணவு பழக்கவழக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு முறைகளால் மனித உடலில் நாள்தோறும் பல்வேறு நச்சுக்கள் சேர்கின்றன. இந்த நச்சுக்களை வெளியேற்றி, உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கை நமக்கு எளிய காய்கறிகள், கீரைகள் மற்றும் மூலிகைகளை வரப்பிரசாதமாக வழங்கியுள்ளது. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகள் ஒவ்வொன்றும் உடலின் குறிப்பிட்ட உறுப்புகளை இயற்கையாகவே சுத்திகரிக்கும் அபார ஆற்றல் கொண்டவை என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது செரிமான மண்டலம் […]
Waterfalls | அன்றாட இயந்திர வாழ்க்கையின் பரபரப்பு, வேலை பளு மற்றும் மன சோர்வில் இருந்து விடுபட இயற்கை நமக்கு அளித்த சிறந்த வரப்பிரசாதம் அருவிக் குளியல் ஆகும். ஆர்ப்பரித்து கொட்டும் குளிர்ந்த நீரில் நீராடுவது உடலுக்கும் மனதிற்கும் உடனடி புத்துணர்ச்சியை வழங்கும். இயற்கை எழிலும், மூலிகை குணங்களும் நிறைந்த தமிழ்நாட்டின் டாப் 10 நீர்வீழ்ச்சிகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள்: ஆகாய கங்கை அருவி (நாமக்கல்): கொல்லிமலையில் அய்யாறு என்ற […]
இந்து தர்மத்தில் எத்தனை தெய்வங்களை நாம் தேடிச் சென்று வழிபட்டாலும், நமது முன்னோர்கள் காலத்திலிருந்து குடும்பத்தை கண்ணின் இமை போல காத்து வரும் குலதெய்வத்தின் அருளாசி இல்லையென்றால் எந்த ஒரு காரியமும் முழுமை பெறுவதில்லை. மனித வாழ்க்கையில் ஏற்படும் கிரக தோஷங்கள், காரிய தடைகள், கண் திருஷ்டி மற்றும் பணப் பிரச்சனைகளை நீக்கி நல்வாழ்வை உறுதி செய்ய குலதெய்வ வழிபாடு முதன்மையாக கருதப்படுகிறது. குறிப்பாக, நமது குலதெய்வத்திற்கு குறிப்பிட்ட சில […]
இந்திய கலாச்சாரத்திலும் இந்து ஆன்மிக நெறியிலும் வாரத்தின் 7 நாட்களும் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு உரிய நாட்களாக வகுக்கப்பட்டு, அதற்கேற்ப விரதமிருந்து வழிபடும் மரபு காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆன்மிக வழிகாட்டல் மன அமைதியைத் தருவதுடன், வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலையும் நன்மைகளையும் பலமடங்கு அதிகரிக்க உதவுகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் சோமவார விரதமிருந்து ஈசனை மனமுருகி வழிபடுவது குடும்பத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் […]

