தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் என்.ஆனந்த், கடந்த கால அரசியல் கணிப்புகளை தவிடுபொடியாக்கி மக்கள் தவெக மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். சட்டசபையில் துறை சார்ந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நெருக்கமாகப் பழகி வருவதை நினைவுகூர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, […]
திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் கதாநாயகனாக நடித்து, அவரது திரையுலகப் பயணத்தின் கடைசி திரைப்படமாக உருவான “ஜனநாயகன்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகக் கலவையான கருத்துகளைப் பெற்றபோதிலும், ரசிகர்களாலும் ஆதரவாளர்களாலும் திரையரங்குகளில் இத்திரைப்படம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில் […]
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது என்றும், அப்பணிகளுக்கு தமிழ் மொழித் தகுதி கட்டாயம் என்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், 1,797 பேருந்து நடத்துனர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான பணி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ‘எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு ரூ.61.56 […]
கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 சொகுசு வாகனங்களை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சொகுசு கார்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ஊத்தங்கரை காவல்துறையினர் சினிமா பாணியில் தீவிர வியூகம் அமைத்து 750 கிலோ குட்கா மற்றும் 3 சொகுசு வாகனங்களைப் பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்துள்ளனர். […]
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தென்மண்டல கவுன்சிலின் 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு, சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டின் குழுத் துணைத் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நடைபெறும் இந்த உயர்மட்ட மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக […]
மூன்றாம் உலகப் போர் அல்லது பெரும் இயற்கை பேரிடர்கள் நேர்ந்தாலும் தங்களது விலைமதிப்பற்ற கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில், உலகப் பெரும் பணக்காரர்களுக்காக சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அதிநவீன பிரம்மாண்ட பாதாளப் பாதுகாப்புப் பெட்டகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற புரூனிக் மலைப்பகுதியில் (Brunig Pass), ‘புரூனிக் மெகா சேஃப்’ (Brünig Mega Safe AG) என்ற தனியார் நிறுவனம் இந்த மெகா தற்காப்பு அரண் […]
தமிழ்நாட்டில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் ஒரே தளத்தில் வழங்கும் வகையில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் “வெற்றிப் பாதை” என்ற புதிய மொபைல் செயலி உருவாக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதிலளித்து பேசிய அமைச்சர், அரசு ஊழியர்கள் மற்றும் […]
புதுச்சேரியில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மாதாந்திர உணவு தானிய மானிய தொகையை தடையின்றி பெறுவதற்கு, ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைப்பேசி எண்களை உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், தவறினால் மானியம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன […]
தமிழ்நாட்டில் பயணிகள் நடமாட்டம் குறைவாக உள்ள வார நாட்களில், போதிய வருவாய் ஈட்டாத அரசுப் பேருந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் போக்குவரத்து மண்டலங்களிலும் குறைவான வருவாய் உள்ள வழித்தடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்ட நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் […]
உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை முழுமையாகத் தடை விதித்துள்ளது. கோயிலின் புனிதம் மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும், சாமி சன்னதிகள் மற்றும் பிரகாரங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் மற்றும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லும் […]

