fbpx

தமிழ் திரை உலகப் பொருத்த வரை தன்னோடு இணைந்து நடிக்கக்கூடிய சக நடிகைகளை திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து இவர்களது …

நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்த ஃபெஞ்சல் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து ஊரே வெள்ளக்காடாக மாறியது. அதிலும் குறிப்பாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை புரட்டி போட்டது. 

விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள், பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை …

நேற்றைய தினம் இரவு, ஃபெஞ்சல் புயலானது காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே  கரையை கடந்த நிலையில் , புதுச்சேரியில் அதீத கனமழையானது பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்த நிலையில், நாளை புதுச்சேரியில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை …

இந்த உலகில் பல்வேறு மொழிகள், இனங்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் உள்ளது. பல்வேறு வினோதமான பழக்க வழக்கங்கள் உள்ளன. அந்த வகையில் வித்தியாசமான பழக்க வழக்கங்களை ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடியின மக்கள் பின்பற்றி இன்றளவும் வருகின்றனர். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்றளவும் பல பழங்குடியின மக்கள் வெளி …

டாலரை புறக்கணிக்கும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். இவர்களின் …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று அதிகாரபூர்வமாக பதவி ஏற்றார். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் …

குளிர்காலத்தில் மக்கள் தங்கள் உள்ளங்கையைத் தேய்ப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். பள்ளியில், ஆசிரியர்களும் முதலில் குழந்தைகளை கைகளைத் தேய்க்கச் சொல்வார்கள். பூங்காவில் யோகா அல்லது உடற்பயிற்சி செய்பவர்கள் தங்கள் உடலை சூடேற்றுவதற்காக உள்ளங்கைகளை ஒன்றாக தேய்க்கிறார்கள். பல சமயங்களில் மக்கள் மயங்கி விழும்போது உள்ளங்கைகள் தேய்க்கப்படும். குறிப்பாக குளிர்காலத்தில் இரு கைகளையும் தேய்ப்பதால் குளிர்ச்சியிலிருந்து நிவாரணம் …

சிறப்பு போட்டித் தேர்வுக்கான தற்காலிக தட்டச்சு பணிக்கு தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்புப் போட்டித் தேர்விற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வயது : 01.07.2024 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 32 என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

1. குறைந்தபட்ச …

விழுப்புரம் அருகே உள்ள கப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளைஞன் ராஜன் (வயது 22). இவர், ஒரு பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதையறிந்த அப்பெண்ணின் உறவினர், ராஜன் கல்லூரிக்கு செல்லும் போது அவரை வழிமறித்து சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டி …

விழுப்புரம் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தினர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் …