சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாநகர், புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. வடபழனி, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், கனமழை மற்றும் சூறைக்காற்றால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், சுமார் 6 […]

நடிகரும் பாஜக மூத்த நிர்வாகியுமான சரத்குமார், தன்னை எளிதில் காண்பதற்கு ஆதரவாளர்கள் கையில் ‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். தமது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆதரவாளர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய சரத்குமார், ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு நெருங்கிய பிணைப்பை உருவாக்கவும் இத்தகைய யோசனையை முன்வைப்பதாக குறிப்பிட்டார். […]

திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வார இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவை செயல்படாது என்பதால், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது சொந்தத் தொகுதிகளுக்குத் திரும்பியுள்ளனர். அதன்படி, அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் […]

மாநில உரிமைகள் மற்றும் கொள்கை விஷயங்களில் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் தமிழக அரசும், முதலமைச்சரும் ஒருபோதும் பணியமாட்டார்கள் என்று அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாநில சுயாட்சி, கொள்கைவாதம் மற்றும் சமூக நீதி குறித்து திமுக பேசுவது முரண்பாடாக உள்ளது. கடந்த கால ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் விவகாரங்கள் காரணமாகவே, வேறு வழியின்றி பாஜகவின் பிடியில் அவர்கள் விழும் சூழல் உருவானது. கொள்கை ரீதியான […]

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டாக கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் எழுதிய கடிதத்தில், “2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி எடுத்த சில ஒருதலைப்பட்சமான முடிவுகளாலேயே கட்சி தொடர் பின்னடைவை சந்தித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். அண்மையில் வெற்றிபெற்ற 47 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 25 பேர், தலைமை எடுத்த தவறான நகர்வுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். […]

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவினங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தற்போதைய காலம் வரையிலான பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு மேற்கொண்ட செலவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளன. அதன்படி, 2021ஆம் ஆண்டில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக சுமார் ரூ.36.11 கோடி செலவிடப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டான 2022இல் இந்த செலவு அதிகரித்து சுமார் ரூ.55.82 கோடியாக […]

சூரியன் அழியும் காலத்தில் பூமியையும் மனித குலத்தையும் காப்பாற்ற முடியுமா என்ற கேள்விக்கு அறிவியல் உலகம் ஒரு புதிய பதிலை முன்வைத்துள்ளது. இன்னும் சில பில்லியன் ஆண்டுகளில் சூரியன் தனது இறுதி நிலையை அடைந்து விரிவடையும் போது, அது புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்களை விழுங்கி பூமியையும் அழித்துவிடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்த பேரழிவில் இருந்து தப்பிக்க கேப்ரியல் ஹாரி என்ற சுயேச்சை ஆராய்ச்சியாளர் ‘ஜர்னல் ஆஃப் தி […]

ஆயுர்வேத மருத்துவத்தில் தேன் வெறும் சுவையான உணவுப்பொருளாக மட்டுமின்றி, பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்த இயற்கை மருந்தாகவும் போற்றப்படுகிறது. இயற்கைச் சர்க்கரைகளுடன் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், என்சைம்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள தேனைச் சரியாக உட்கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், செரிமானத்தை சீராக்கி, சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். இருப்பினும், தேனை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மைகளுக்குப் பதிலாகத் தீங்கையே விளைவிக்கும் என […]

நமக்கு தீங்கு விளைவித்தவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம், பாதிக்கப்பட்ட பலரின் மனதிலும் எழும் ஒரு இயல்பான உணர்வாகும். இருப்பினும், பிறர் செய்த தீங்கையும் அதனால் ஏற்பட்ட கோபத்தையும் மனதில் சுமந்துகொண்டே இருப்பது நமக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குவதற்கு ஒரு அழகான குட்டிக்கதை சுட்டிக்காட்டப்படுகிறது. ஒருமுறை சீடன் ஒருவன் தனது குருவிடம் சென்று, “என்னை ஒருவர் மிகவும் காயப்படுத்திவிட்டார். அவர் செய்த தீமைக்கான […]

முதல்வர் விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே அரசியல் ரீதியான கருத்து மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றனர். முன்னதாக கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கி உத்தரவிட்டார். இருப்பினும், அரசுப் பணிக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் சூழலில், […]