விவசாயிகளுக்கு நன்மை செய்ய அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லை. இந்த ஜென்மத்திலேயே தேவையான நன்மைகளை செய்து முடிக்கலாம்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை […]

உத்தரப்பிரதேச மாநிலம், சந்த் கபீர் நகர் மாவட்டம் டேவரி கிராமத்தை சேர்ந்தவர் புத்தி ராம் நிஷாத் (45). இவருக்கும் ஃபுல்மதி (37) என்பவருக்கும் இடையே கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 18 வயதில் மூத்த மகன் உட்பட மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புயல் வீசத் தொடங்கியது. ஃபுல்மதிக்கு அதே […]

தமிழக வெற்றிக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் உரிய காலக்கட்டத்தில் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக சார்பில் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ரூ.4,000 உதவித்தொகை போன்ற பிரதான வாக்குறுதிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், “பெரும்பாலான வாக்குறுதிகளை நமது அரசு […]

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி அழைத்து சென்ற லாரி டிரைவரை, வேலூர் மாவட்ட காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். காட்பாடி தாலுகா, வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டைப் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31) என்பவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், பிரகாஷ் […]

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது முந்தைய அரசின் நல்ல திட்டங்களை தொடர்வது இயல்பான ஒன்றுதான் என்றும், திட்டங்களுக்கு எந்த தனிநபரின் பெயரையும் சூட்டாமல் பொதுவான பெயர்களை சூட்டுவதே தவெக அரசின் முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக அரசு புதிய பெயர்களில் பழைய திட்டங்களையே ‘ஸ்டிக்கர்’ ஒட்டிச் செயல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு […]

இந்து தர்மத்திலும், ஆன்மீக சாஸ்திரத்திலும் தினமும் வீட்டில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் தரும் மிக முக்கியமான வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது. இருப்பினும், சாஸ்திர விதிகளின்படி சில குறிப்பிட்ட சூழல்களிலும் நாட்களிலும் வீடுகளில் தீபமேற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆன்மீக பெரியோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, உறவினர்கள் அல்லது பங்காளிகளின் குடும்பங்களில் இறப்பு சம்பவிக்கும் பட்சத்தில், அதற்கான இறுதி சடங்குகள் மற்றும் காரியங்கள் நிறைவடையும் வரை வீடுகளில் விளக்கேற்றி […]

வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருக வேண்டும் என்பதற்காகப் பெரும்பாலானோர் வீடுகளில் வாஸ்து சாஸ்திரத்தை மிக முக்கியமாக கருதுகின்றனர். இருப்பினும், சில வீடுகளில் தவிர்க்க முடியாத காரணங்களால் வாஸ்து குறைபாடுகள் ஏற்படுவது உண்டு. இத்தகைய வாஸ்து தோஷங்களின் எதிர்மறைத் தாக்கத்தைக் குறைத்து, வீட்டில் நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்க சில குறிப்பிட்ட ஆன்மீக மற்றும் அலங்காரச் சிலைகளை வைப்பது நல்ல தீர்வாக அமையும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டில் நிதி […]

காலை உணவில் முட்டையை சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மையா அல்லது தீமையா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறிப்பாக, முட்டையின் மஞ்சள் கருவில் அதிகளவில் கொலஸ்ட்ரால் இருப்பதால், அதைச் சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்து என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது. இதன் காரணமாகவே, உடல்நலத்தில் அதிக அக்கறை கொண்டவர்களும் முதியவர்களும் மஞ்சள் கருவைத் தவிர்த்துவிட்டு, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த நம்பிக்கையை மறுபரிசீலனை […]

நீதிமன்ற அவமதிப்பு என்ற வார்த்தையை கேட்டாலே நடுக்கம் ஏற்படும் காலம் மலையேறி விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வரும் டாக்டர் செந்தில்குமார் என்பவரை, திண்டுக்கல்லில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடிக்குத் துறை நிர்வாகம் கடந்த 2025 ஜூன் மாதம் பணியிட மாற்றம் செய்தது. அடுத்த நான்கு மாதங்களிலேயே அவரை மீண்டும் தூத்துக்குடிக்கு மாற்றியதை எதிர்த்து, அவர் உயர் […]

தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூலை மாதத்தில் பெய்த பரவலான மழை மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தந்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் மழைப்பொழிவு கணிசமாக குறையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சராசரி மழைப்பொழிவு 254.9 மில்லிமீட்டராக இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் வழக்கமான அளவில் 94 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த […]