சீனாவை உலகளவில் முன்னணி பொருளாதார வல்லரசாக கட்டியெழுப்பிய முன்னாள் பிரதமரும், “பொருளாதாரத்தின் இரும்பு மனிதர்” என்று போற்றப்பட்டவருமான ஜூ ரோங்ஜி (97) உடல்நலக் குறைவால் பெய்ஜிங்கில் காலமானார். 1998 முதல் 2003 வரை பிரதமராக இருந்த இவர், சீனாவை சந்தைப் பொருளாதாரப் பாதைக்கு திருப்பி, வறுமையைக் குறைத்து, பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்த முதன்மை சிற்பியாவார். அரசு அதிகாரிகள் சலுகைகளை எதிர்பார்க்காமல், மக்கள் சேவகர்களாக உண்மை பேச வேண்டும் என வலியுறுத்திய […]
தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு புதிய வேகம் கொடுக்கும் நோக்கில், மாநில அரசு ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு நாளை சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்விற்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்குகிறார். இதில் நாட்டின் முன்னணித் தொழில் அதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர். மாநிலத்தில் தொழிற்கட்டமைப்பை […]
தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாவட்த்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் தூத்துக்குடி மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழக்கம். இந்த […]
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ராம்நாத் கோவிந்த வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவம் பற்றி கூறினார். ராம்நாத் கோவிந்த் இப்போது ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அது பற்றி சுயசரிதையிலும் எழுதி இருக்கிறார். கோவிந்த் சிறுவனாக இருந்தபோது, ஒரு கோடை காலத்தில் அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவரது தாயார் தமது உயிரை பற்றிக்கூட […]
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை டெல்லியில் பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம், இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரிய அடையாளமாக மாறும் எனக்கூறினார். இளைய தலைமுறையினர் இந்த புத்தகத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இது ரீல்ஸ் காலம். சோஷியல் மீடியா பிரபலங்கள் இளைஞர்களை வேறு திசையில் ஈர்க்ககூடும். குறுக்கு வழியில் செல்ல நினைப்பவர்கள், ரயில் நிலையங்களில் […]
அரசியல் களத்தில் இறங்க தீவிர ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷின் நகர்வுகளையும், அவரது ரசிகர் மன்ற செயல்பாடுகளையும் உளவுத்துறை மூலம் தீவிரமாக முதல்வர் விஜய் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் கடந்த ஓராண்டாகவே அரசியல் பிரவேசம் குறித்து யோசித்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக தனது ரசிகர் மன்றத்தை முழுமையான அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது பிறந்த நாள் விழாவில் பிரத்யேக கொடியை […]
பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், தனது அனுமதியின்றி இணையத்தில் உலா வரும் 5,000-க்கும் மேற்பட்ட வலைதளப் பக்கங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள், போலி சமூக வலைதள கணக்குகள் மற்றும் சாட்போட்டுகளை (Chatbots) நீக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நடிகையின் அனுமதியின்றி ஆபாசமாக உருவாக்கப்பட்ட பக்கங்கள் மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களை இணையத்திலிருந்து […]
LPG Gas | வீட்டு சமையல் எரிவாயு பயனாளிகள் ஆதார் வாயிலாக உண்மைத் தன்மையை சரிபார்க்க தவறினால், சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது என்று பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தியே என மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தகுதியான பயனாளிகளுக்கு அரசு வழங்கும் மானியம் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க எண்ணெய் நிறுவனங்களுக்கு […]
டெங்கு கொசு ஒழிப்பு மருந்து அடித்தபோது, மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட சத்தி சாலை உப்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மோகன். அதே பகுதியில் ராணி என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் கொசு மருந்து […]
தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகச் சட்டமன்றத்தில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், தொகுதி மறுவரையறை […]

