தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசின் ஒரு ரூபாய் வருவாயில் எந்தெந்த துறைகளிலிருந்து எவ்வளவு பணம் கிடைக்கிறது மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த விரிவான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயை கணக்கிடுகையில், அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாயில் அதிகபட்சமாக 43.3 சதவீதம் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலமாகவே பெறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, 33.1 சதவீதம் […]

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு, தமிழக அரசு சார்பில் மொத்தம் ரூ. 80 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் விஜய் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவெடுக்க வைக்கும் நோக்கில், தமிழக அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உயர்தரப் […]

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மதுபானங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “சென்னையின் கொளத்தூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட 30 முக்கியப் பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் […]

உலகளாவிய வர்த்தக நகர்வுகள் மற்றும் இறக்குமதி வரிக் கொள்கைகள் காரணமாக தங்கத்தின் சந்தை விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,240 வரை உயர்ந்து நகைப் பிரியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 5)இரண்டு முறை உயர்வை சந்தித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 4) ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,600-க்கும், ஒரு […]

தமிழக அரசின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்து, தற்போது ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், மாநிலத்தின் வரி வருவாய் அதிகரித்திருந்தாலும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஆதாரங்கள் குறைந்துள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நிதி மேலாண்மை பற்றிய வெள்ளை அறிக்கையிலேயே, கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் அளவு இருமடங்காக […]

டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபான வகைகளை, மது பிரியர்கள் மொபைல் போன் செயலியில் தேர்வு செய்து, பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தி, வாங்கி கொள்ளும் திட்டத்தை, டாஸ்மாக் நிர்வாகம் தொடங்க உள்ளது. தமிழகத்தில் 4,048 டாஸ்மாக் கடைகள் மூலம் பீர் மற்றும் மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகளுக்கு, மது பிரியர்கள் நேரில் சென்று, மதுபானங்களை வாங்க வேண்டும். பல கடைகளில், மது பிரியர்கள் விரும்பி கேட்கும் மது […]

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு இ-கேஒய்சி (eKYC) பதிவு முகாம் வரும் ஆகஸ்ட் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் வழிகாட்டுதலின்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டு, அவர்களின் விரல் ரேகை […]

வாஸ்து சாஸ்திரத்திற்கு எப்போதும் தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் எவ்வளவு சாதகமாக அமைந்திருந்தாலும், அவர் வசிக்கக்கூடிய இடம் அல்லது வீட்டின் அமைப்பு சரியாக இல்லை என்றால், வாழ்வில் பல்வேறு தடைகளையும் துன்பங்களையும் சந்திக்க நேரிடும் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஒரு குடும்பத்தில் அமைதியும் மனநிம்மதியும் நிலவுவதற்கு, நாம் வாழும் இல்லமும் அதைச் சுற்றியுள்ள சூழலுமே முதன்மை காரணியாக அமைகின்றன. சுற்றிலும் எதிர்மறை ஆற்றல்கள் […]

முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை பனையூரில் நடந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக சாடினார். இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், இன்னும் ஆறு மாத காலத்திற்குப் பிறகு திமுகவினர் வீட்டை விட்டு […]

முதல்வர் விஜய், நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணையை முடித்த காவல்துறையினர், அவரை காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர். தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தவெக மகளிரணி தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினர் உதயநிதியை […]