வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை திரும்பப் செலுத்துமாறு வலியுறுத்தும் போது, கடன் வசூல் முகவர்கள் (Recovery Agents) வரம்பு மீறிச் செயல்படுவதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ➣ கடன் வழங்கிய நிறுவனங்களோ அல்லது வசூல் முகவர்களோ வாடிக்கையாளர்களைக் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நேரத்தை தாண்டி […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் […]

காவிரி நீர் நமக்கு உயிர் ஆதாரம்; அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இந்த அரசுக்கு சிறிதும் இல்லை. தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் பக்கத்து மாநிலத்திடம் பேசி தீர்வு காணும்போது அவமானம் நேரிட்டாலும், மக்களுக்காக அதைத் தாங்கிக் கொள்ளத் தயார்” என்று முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சனும், அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத்தும் […]

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல், 22 வயது வாலிபரை கத்தியால் குத்தியும், சுத்தியலால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் அஸ்வின் வயது 22. கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அஸ்வினுக்கு விஷ்ணு என்ற நண்பர் இருந்தார். தினமும் இரவு விஷ்ணுவின் வீட்டில் தங்குவது அஸ்வினின் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜயிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற்றதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஜூன் 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு வழக்கறிஞர்களும் […]

இன்றைய நவீன சூழலில் தலைவலி, காய்ச்சல், உடல் வலி போன்ற அசௌகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் மருத்துவரை அணுகாமல் நேரடியாக மருந்துக் கடைகளில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சிறு சிறிய வலிகளுக்குக் கூட சுய மருத்துவம் செய்து கொள்ளும் இந்த போக்கு, நாளடைவில் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மிக கொடூரமாக பாதிக்கும் எனச் சிறுநீரக நோய் நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து […]

கிராமப்புறங்களில் முருங்கை மற்றும் வேப்ப மரங்கள் இல்லாத வீடுகளே இல்லை எனும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் பரப்பப்பட்ட மூடநம்பிக்கைகள் காரணமாக பலர் தங்கள் வீடுகளில் இருந்த முருங்கை மரங்களை வெட்டி அகற்றும் சூழல் உருவானது. குறிப்பாக, முருங்கை மரத்தில் பேய், பிசாசுகள் குடியிருக்கும் என்ற அச்சமே இதற்கு காரணம். விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனம் உச்சம் தொட்டு வரும் இக்காலகட்டத்திலும், பில்லி சூனியம் மற்றும் பேய் சார்ந்த […]

நமது முன்னோர்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்த பல வாழ்க்கை முறைகளுக்கு பின்னால் ஆழமான அனுபவ அறிவும், ஆரோக்கியக் கோட்பாடுகளும் நிறைந்துள்ளன. அந்த வகையில், தரையில் அமர்ந்து உணவருந்தும் வழக்கம் வெறும் பாரம்பரிய அடையாளம் மட்டுமல்லாமல், உடலியல் ரீதியாக பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. தரையில் சம்மணமிட்டு, சுகாசனம் போன்ற நிலையில் அமர்ந்து சாப்பிடும் போது, முதுகெலும்பு இயல்பாகவே நேராக நிமிர்கிறது. உணவை எடுத்து உண்பதற்காக முன்னும் பின்னும் லேசாக குனியும் அசைவுகள், […]

நமது முன்னோர்களின் அன்றாட வாழ்வியல் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார சடங்குகள் ஒவ்வொன்றிற்கு பின்னாலும் ஆழமான அறிவியல் மற்றும் ஆரோக்கியக் கோட்பாடுகள் ஒளிந்திருக்கின்றன. விசேஷ நாட்கள் முதல் வீடுகளின் தினசரி உணவு முறை வரை வாழை இலையைப் பயன்படுத்தி உணவருந்தும் பாரம்பரிய பழக்கம், வெறும் ஆசாரமாக மட்டுமின்றி மிகச்சிறந்த சுகாதார மற்றும் உடலியல் நன்மைகளைக் கொண்டது என்பதை நவீன அறிவியல் ஆய்வுகளும் வெளிப்படுத்துகின்றன. வாழை இலையில் ‘பாலிஃபெனால்கள்’ (Polyphenols) எனப்படும் இயற்கை […]

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்றும், கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 வசூலிப்பதைத் தடுக்கவுமே முன்பதிவு முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆன்லைனில் மதுபானங்களை நேரடியாக வாங்குவதற்குச் சாத்தியமில்லை; மாறாக, இணையவழியில் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும். பொதுமக்கள் வழக்கம் […]