fbpx

ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீத வரி…! அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும்…!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீத வரி அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

டெல்லி, கோவா போன்ற மாநிலங்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஆன்லைன் கேம்களுக்கு 28 சதவீத வரி விதிக்கும் முடிவு வரும் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி கவுன்சில் – மத்திய நிதியமைச்சர் மற்றும் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய புதிய மறைமுக வரி விதிப்பின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாகும். கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அமல்படுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

Vignesh

Next Post

பெற்றோர்களே கவனம்!… பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைய இதுதான் காரணம்!… அதிர்ச்சி!

Thu Aug 3 , 2023
பெண் குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைதல் ஏற்பட காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். பெண் குழந்தைகளின் ஆரம்ப பருவமடைதலின் பொதுவான அறிகுறிகள் மார்பக வளர்ச்சி, அந்தரங்க அல்லது அக்குள் முடி, மாதவிடாய் மற்றும் அண்டவிடுப்பு மற்றும் ஆண்களைப் பொறுத்தவரை விரிவடையும் ஆண்குறி, அந்தரங்க அல்லது அக்குள் முடி, முகப்பரு, குரல் மாற்றம், முக முடி போன்றவை. இயற்கையாக பருவமடைதல் சராசரியாக 8 முதல் 13 வயது வரையிலான பெண்களிடமும், […]

You May Like