மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக பரவி வரும் தகவல் போலியானது என்று அரசு விளக்கமளித்துள்ளது.
ஜூலை 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. செப்டம்பர் 20, 2022 தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையால் வெளியிடப்பட்ட கடிதத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான உத்தரவு ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. எனினும் இந்திய பத்திரிகை தகவல் பணியகமான PIB இந்த தகவலை மறுத்துள்ளது.. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிஐபி “, 01.07.2022 முதல் அகவிலைப்படியின் கூடுதல் தவணை அமலுக்கு வரும் என்று வாட்ஸ்அப்பில் பரவும் உத்தரவு போலியானது.. மத்திய செலவினத் துறை அத்தகைய உத்தரவு எதையும் வெளியிடவில்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை மக்கள் கிளிக் செய்ய வேண்டாம் என்று PIB அவ்வப்போது அறிவுறுத்துகிறது.. அது உண்மையான செய்தியா அல்லது அது பொய்யான செய்தியா என்பதை பிஐபி மூலம் சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு செய்தியை அனுப்ப வேண்டும். மேலும் நீங்கள் உண்மைச் சரிபார்ப்புக்கு +918799711259 என்ற எண்ணுக்கு WhatsApp செய்தியை அனுப்பலாம். உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்பு தகவல் https://pib.gov.in இல் கிடைக்கிறது.