தலைநகர் டெல்லியில், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய 50 வயது முதியவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.
தெற்கு டில்லியின் லோதி காலனி பகுதியில், ஒரு 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அண்டை வீட்டில் வசிக்கும் 50 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
லோதி காலனி பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்பத்தோடு, வசித்து வருகிறார். அவருடைய அண்டை வீட்டில் 50 வயதான நபர் ஒருவரும், தன்னுடைய குடும்பத்தோடு, வசித்து வந்தார் இருவரும் பக்கத்து, பக்கத்து வீடு என்பதால், இயல்பாக பேசி, பழகி வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த சிறுமி தன்னுடைய வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அந்த சிறுமியை 50 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இதன் காரணமாக, கடும் அதிர்ச்சியான அந்த சிறுமி, தன்னுடைய குடும்பத்தினர் வீடு திரும்பியவுடன், தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி, தன்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். ஆகவே கடந்த திங்கள்கிழமை அதிகாலை 2.20 மணி அளவில் லோதி காலனி காவல் நிலையத்தில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, அவருடைய தாயார் புகார் வழங்கினார்.
இந்த புகாரை அடிப்படையாக வைத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்பு போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அந்த 50 வயது முதியவரை கைது செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.