கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்தபோது திடீரென்று தாயை காணவில்லை என்று தேடி வந்த, மூன்று வயது குழந்தையை தன்னுடைய கள்ளக்காதல் வெளியே தெரிந்துவிடும் என்ற பதட்டத்தில், கொலை செய்த தாயையும், கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. குவாலியர் பகுதியைச் சேர்ந்த தியான்சிங்,ஜோதி ரத்தோர் தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் தான், ஜோதிரத்தோர்க்கு தன்னுடைய அண்டை வீட்டில் இருக்கும் ஒரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி, தன்னுடைய கணவர் வெளியே சென்றிருந்த சமயத்தில், ஜோதி தன்னுடைய கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்திருக்கிறார். அப்போது தன்னுடைய தாயை காணவில்லை என்று தேடி வந்த மூன்று வயது குழந்தை, தாய், தன்னுடைய கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துள்ளான். இதனால், தன்னுடைய கள்ளக்காதல் விவகாரத்தை மகன் எங்கே வெளியே சொல்லி விடுவானோ என்ற பயம் காரணமாக, அந்த மூன்று வயது பச்சிளம் குழந்தையை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். பின்பு, குழந்தை மாடியில் இருந்து, தவறி, கீழே விழுந்து விட்டது என்று குடும்பத்தாரிடம் நாடகம் ஆடியுள்ளார்.
ஆனால், குழந்தை இறந்த பிறகு, அடிக்கடி, ஜோதிக்கு உறங்கும்போது, கெட்ட கனவுகள் வந்துள்ளது. இதனால், பயந்து போன அவர், குழந்தையை தான்,தான் கொலை செய்ததாக கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த கணவர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குழந்தையை கொலை செய்த ஜோதி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் உள்ளிட்ட இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.