சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கணவன் தனது மனைவியை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் பவன். இவர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு தனது மனைவியின் மீது தீராத சந்தேகம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவரை கொலை செய்த முடிவு எடுத்திருக்கிறார் பவன். இதற்காக திட்டம் தீட்டிய பவன் தனது இரண்டு குழந்தைகளையும் சொந்த ஊரில் விட்டு வந்து தனது மனைவியை கொலை செய்து அவரது உடலை மறைத்து வைத்திருக்கிறார். இந்தக் கொலை நடந்த இரண்டு மாதங்களுக்குப் பின் தற்போது உண்மை வெளியே தெரிய வந்திருக்கிறது.
ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக பவன் வீட்டை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அவரது வீட்டின் தண்ணீர் தொட்டியில் இருந்து அழுகிய துர்நாற்றம் வருவதை அறிந்த காவல்துறையினர் அதை சோதனை செய்து பார்த்தபோது அதில் ஒரு பெண் அழுகிய நிலையில் பிணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவனிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தன் வீட்டின் தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருந்தது தனது மனைவியின் உடல் தான் என்றும் அவர் மீது இருந்த சந்தேகத்தால் அவரை கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் பதுக்கி வைத்ததாக காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார் பவன். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.