இன்று இருக்கின்ற காலகட்டத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு உணவுகளை உணவுப் பொருட்கள் என்ற பெயரில் நாம் சாப்பிட்டு வருகிறோம். அந்த உணவுப் பொருட்கள் மூலமாக மனிதர்களுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன.
அந்த வகையில், இன்று இருக்கக்கூடிய இளம் தலைமுறையினர்,திருமணமாகி பல வருடங்கள் ஆன பின்னரும், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறார்கள். இது முன்பெல்லாம் மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது. ஆனால் இன்று குழந்தை பிறக்க தாமதமானாலும் அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தை சார்ந்த சந்தீப், அல்கா தம்பதியினருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன பின்னரும், குழந்தை பாக்கியம் இல்லாததால், இருவரும் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குழந்தை இல்லாததன் காரணமாக, தம்பதிகள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு எழுந்து வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. மேலும் அல்கா சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான், அவருக்கு திடீரென்று உடல்நலத் குறைவு ஏற்பட்டுள்ளது.
கடுமையான உடல்நிலை பாதிப்புக்கு ஆளான அல்கா, படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் கொண்ட கணவர் அவரை கொடூரமாக, அடித்தே கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பெயரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மனைவியின் சடலம் அருகே அமர்ந்து கொண்டு இருந்த சந்தீப்பை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், உயிரிழந்த அல்காவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.