fbpx

“நீ என் கைய கடிக்கிறியா கிழவி, நான் உன் கன்னத்தை கடிக்கிறேன்…….”! வீட்டை காலி செய்ய வற்புறுத்திய மூதாட்டி கொலை!

சென்னை தரமணியில் வீடு காலி செய்யச் சொன்ன மூதாட்டியை அக்கா தம்பி இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை தரமணி கம்பர் தெருவை சார்ந்தவர் சாந்தகுமாரி வயது 65. இவருக்கு இரண்டு மகள்கள். இருவரும் திருமணமாகி தங்களது கணவருடன் வசித்து வந்த நிலையில் சாந்தகுமாரி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இதனால் முதல் மாடியை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து தனது காலத்தை கழித்துக் கொண்டு இருந்துள்ளார். கடந்த 12ம் தேதி காலை 6 மணிக்கு வீட்டு வாசலில் கோலமிட்ட சாந்தகுமாரி அதன் பிறகு வெளியே வரவில்லை. காலை 8 மணி அளவில் புடவை வியாபாரி அவரது வீட்டு கதவை தட்டியிருக்கிறார் . அப்போதும் சாந்தகுமாரி கதவை திறக்காததால் அவரது மகள்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார் புடவை வியாபாரி. இதனைத் தொடர்ந்து அவரது மகள்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சாந்தகுமாரி பிணமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் சில காயங்கள் காணப்பட்டதால் காவல்துறையினர் இது கொலையாக இருக்கும் என சந்தேகித்தனர். அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரித்து வந்தனர்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை செய்யப்பட்டது. மோப்ப நாயும் அவரது வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்று விட்டு அங்கேயே நின்றுவிட்டது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போதும் வெளிநபர்கள் யாரும் உள்ளே வரவில்லை இதனால் கொலையாளி அவரது வீட்டிற்கு அருகில் தான் பதுங்கியிருக்க வேண்டும் என சந்தேகித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையின் தீவிர விசாரணையில் சாந்தகுமாரியின் முதல் மாடியில் குடியிருந்த ஸ்ரீஷா மற்றும் அவரது தம்பி ஆகியோர்தான் இணைந்து மூதாட்டி சாந்தகுமாரி கொலை செய்திருக்கிறார்கள் என கண்டுபிடித்துள்ளது போலீஸ். இது தொடர்பாக அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன. சாந்தகுமாரி ஸ்ரீசா மற்றும் குடும்பத்தினரை வீட்டை காலி செய்து விட்டு செல்ல வேண்டும் என கூறியதாலும் ஸ்ரீஷாவை தகாத வார்த்தைகளால் திட்டி வந்ததாலும் அவரை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் இவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையின்போது சாந்தகுமாரி ஸ்ரீசாவின் தம்பியின் கைகளை கடித்திருக்கிறார். அதற்கு பலிக்கு பலியாக ஸ்ரீஷாவின் தம்பியும் சாந்தகுமாரியின் கன்னத்தை கடித்து இருக்கிறார். அவரது கன்னத்திலிருந்த காயம் தான் இந்தக் கொலையில் துப்பு துவங்குவதற்கு மிகவும் உதவியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஸ்ரீசா அவரது தம்பி மற்றும் அவரது தாய் மேரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Rupa

Next Post

மருமகளின் அந்தரங்க உறுப்பு, கண், காதில் ஆசிட் ஊற்றிய மாமியார்! மேலும் கொசு மருந்தை அடித்து கொலை செய்ய முயன்ற கொடூரம்!

Mon Mar 13 , 2023
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மருமகளின் கண்களில் மாமியார் ஆசிட் ஊத்திய விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே வசித்து வருபவர் முகேஷ் ராஜ் இவருக்கும் கிருத்திகா என்ற பெண்மணிக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் .முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கிருத்திகா மாமியார் மற்றும் […]

You May Like