திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது நண்பர்கள் யாரும் தன்னுடன் பேசாத காரணத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் ஜெம்புநாதபுரம் காவல் சுற்றுபுரத்தை சார்ந்த பெத்துப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் விஜயன் இவரது மகன் கண்ணன் வயது 29. இவர் கட்டிடங்களில் சென்ட்ரிங் வேலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். தனது நண்பர்கள் யாரும் தன்னுடன் சரிவர பேசாத காரணத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது .
இதன் காரணமாக மனம் உடைந்த நிலையில் இருந்த இவர் விஷம் வாங்கி குடித்துவிட்டு வீட்டின் அருகே மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தின் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து தற்கொலை செய்து கொண்ட கண்ணனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.