fbpx

எனக்கு கிடைக்காத நீ யாருக்குமே கிடைக்கக்கூடாது….! காதலியை கொலை செய்ய முயன்ற இளைஞர் இறுதியில் என்ன செய்தார் தெரியுமா….?

தன்னை தொடர்ந்து, காதலிக்க மறுத்த தன்னுடைய காதலியை கொலை செய்ய முயற்சித்த இளைஞர் ஒருவர், பின்னர் அவரே காதலியை மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் ராம்நகரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும், சேத்தன் (22) என்ற இளைஞரும் நட்பாக, நெருங்கி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே, காதலாக மாறியது. பின்னர் இந்த காதல் விவகாரம் பெண் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததால், அவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே, மாணவி, சேத்தனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

ஆனாலும், தன்னை காதலிக்க வேண்டும் என்று அந்த இளைஞர் தொடர்ந்து, மாணவியை தொந்தரவு செய்து வந்துள்ளார். அதோடு, இது பெண் வீட்டிற்கு தெரிய வந்ததால், இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, இந்த விவகாரம் காவல் நிலையம் வரையில் சென்றுள்ளது.

இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை, இளைஞர்,இனி மாணவியை பின் தொடர மாட்டேன் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, பிரச்சனையை முடித்து வைத்தது. ஆனால், அந்த இளைஞர் மீண்டும் கடந்த இரண்டு வார காலமாக அந்த மாணவியை பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும், அந்த மாணவி, அந்த இளைஞருடன் பேசாததால், அவரை கொலை செய்ய அந்த இளைஞர் திட்டமிட்டு இருக்கிறார். மேலும். அந்த மாணவியை காரில் பின்தொடர்ந்த அந்த இளைஞர், பள்ளியை நெருங்கும்போது, காரை வைத்து அந்த மாணவியை இடித்துள்ளார். இதனால், அந்த மாணவி, நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அதன் பிறகும், அந்த இளைஞர் அரிவாளை எடுத்து, அந்த மாணவியை சரமாரியாக வெட்டியிருக்கிறார். அதன் பிறகு, மாணவியை காரில் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், இளைஞர் சேத்தனை தீவிரமாக தேடி வந்தனர்.

அந்த இளைஞர், அந்த மாணவியை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்பு அங்கிருந்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் அந்த மருத்துவமனைக்கு விரைந்து சென்று, அந்த இளைஞரை கைது செய்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்ற அந்த மாணவிக்கு, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Next Post

’விஜய் அரசியலுக்கு வந்தால் கட்டாயம் இதை செய்ய வேண்டும்’..!! நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி..!!

Tue Aug 29 , 2023
நடிகர் விஷால் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்சி ஹோம் முதியோர் கருணை இல்லத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடுவது கடவுளிடம் நேரில் வாழ்த்து பெறுகிறது போல் உள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு குறித்து மக்கள்தான் கூற வேண்டும். அவர் மீண்டும் நடிக்க […]

You May Like