கிரேட்டன் நொய்டாவில் அத்தையை மருமகன் கொடூரமாக கொலை செய்து மூட்டை கட்டி வைத்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தின் பங்கா மாவட்டத்தைச் சார்ந்த ஆஷிஷ் ரஞ்சன் தனது அத்தையான பூஜா சிங் என்பவருடன் தவறான உறவு வைத்திருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து பீகாரில் இருந்து வெளியேறி ஜார்க்கண்ட் சென்று அங்கு திருமணம் செய்துள்ளனர். அதன் பிறகு ஜார்கண்டிலிருந்து கிரேட்டர் நொய்டா வந்து அங்குள்ள செக்டார் காமா பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து உல்லாசமாக தங்கள் பொழுதை கழித்திருக்கின்றனர். திடீரென ஒரு நாள் அவர்கள் வாழ்ந்த வீட்டின் மாடியில் இருந்து துர்நாற்றம் வீசவே அங்கு சென்று பார்த்திருக்கிறார் வீட்டின் உரிமையாளர். மூட்டை கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பையில் இருந்து துர்நாற்றம் வரவேஈசந்தேகம் அடைந்த அவர் காவல்துறையினரை தொடர்பு கொண்டு இருக்கிறார். காவல்துறையினர் வந்து சோதனை செய்ததில் பூஜா சிங் கொலை செய்யப்பட்டு மூட்டை கட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் ஆசிஸ் ரஞ்சன் மற்றும் பூஜா சிங் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஆசிஸ் பூஜா சிங்கை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அவரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. வாக்குவாதம் தொடர்பாக ஏற்பட்ட மோதலையடுத்து ஆஷிஷ் ரஞ்சன் பூஜா சிங்கை கொலை செய்து அவரை பையில் போட்டு கட்டி வைத்துவிட்டு தப்பியோடி இருக்கலாம் என வீட்டின் உரிமையாளர் அவ்னீஷ் தெரிவித்துள்ளார்.