fbpx

பாஜக-வும், NIA-வும் ஜமேஷா முபினுக்கு பயிற்சி கொடுத்தார்களா? பகீர் கிளப்பிய அப்பாவு.!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஆளுநரை போல நான் ஒரு பொதுவான பதவியில் இருப்பவன். ஆனால், கோவை கார் குண்டுவெடிப்பு குறித்து எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. ஆளுநர் ஆர் என் ரவி கார் வெடிப்பு சம்பவம் குறித்த தடயங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்.

எந்த அடிப்படையில் இப்படி எல்லாம் அவர் கூறுகிறார் என்பது எனக்கு புரியவில்லை. தடயங்கள் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் கிடைத்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதை அழித்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு பொதுவெளியில் ஆளுநர் இப்படி கருத்து கூறுவதை ஏற்க முடியாது.

தமிழக அரசு கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு இருப்பதாக ஏற்கனவே ஆளுநர் பாராட்டு தெரிவித்தார். அதன் பின், இப்படி கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது? ஸ்டாலின் சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குள் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று விசாரணையை தொடங்கியுள்ளது.

பாஜகவினர் கோவை கார் வெடிப்பு குறித்து பல்வேறு வதந்திகளை கூறுகின்றனர். 2019 இலங்கை ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பில் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நபர்களை ஜமேஷா முபின் சந்தித்து இருக்கிறார். அப்போது இதை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரித்துள்ளனர்.

அப்படிப்பட்டவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் எதற்காக வெளியில் விட்டனர்? பாஜகவும் தேசிய புலனாய்வு அமைப்பும் சேர்ந்து ஜமேஷா முபினுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பியதாக நிறைய வதந்திகள் வெளியாகி வருகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

Baskar

Next Post

வேப்ப மரம் வெட்டிய இடத்தில் 15 நாட்களாக குடியிருக்கும் நல்ல பாம்பு.! பாலூட்டி பூஜிக்கும் மக்கள்.!

Sun Oct 30 , 2022
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி அருகே வல்லம் சித்தேரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில், விவசாய கூலி தொழிலாளியாக இருப்பவர் ஒருவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தை வெட்டி இருக்கின்றார். அப்போது அங்கிருந்து ஆறடி நீளம் கொண்ட ஒரு நல்ல பாம்பு வெளிவந்ததை அடுத்து அவர் அங்கிருந்து பதறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு பாம்பு இல்லை. எனவே, தொடர்ந்து அந்த வேப்ப […]

You May Like