fbpx

மழைக்காலங்களில் வீடுகளில் கொசு தொல்லையா.? இனி கவலை வேண்டாம், இப்படி செய்து பாருங்கள்.!

மழைக்காலங்களில் மனிதர்களுக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கக்கூடிய விஷயங்களில் முக்கியமான ஒன்று கொசுத்தொல்லை. இதுபோன்ற கொசுக்களால் நமக்கு தூக்கம் கேட்டு விடுவதோடு டெங்கு மலேரியா போன்ற அச்சுறுத்தக் கூடிய வியாதிகள் ஏற்படுகின்றன. மேலும் கொசுவை விரட்டுவதற்காக நாம் பயன்படுத்தும் கொசுவத்தி போன்றவற்றால் நமக்கு பலவிதமான சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம்.

இவற்றைத் தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆல் அவுட் போன்றவை அதிக விலை கொண்டதாக இருக்கிறது. எனவே இந்த மழைக் காலத்தில் கொசுவின் தொல்லையில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில எளிய வழிமுறைகளை பார்ப்போம். கொசுக்களை விரட்டுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது பூண்டு. இதன் கடினமான வாசனைக்கு கொசுக்கள் வராது. இதற்குக் காரணம் பூண்டில் இருக்கக்கூடிய அல்லிசன் என்ற அமிலம் ஆகும். இந்த பூண்டுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பூண்டு ஸ்பிரே பயன்படுத்துவதன் மூலம் கொசு வராமல் தடுக்கலாம்.

இதற்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அவற்றில் இரண்டு பல் பூண்டை தட்டி போட்டு நன்றாக கொதிக்க விடவும். பூண்டு நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவும். இந்தக் கலவை நன்றாக ஆறியதும் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களில் ஸ்பிரே செய்யவும். இதனால் கொசுக்கள் வருவதை தடுக்கலாம். மேலும் இது கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது .

கொசுக்களை எளிய வகையில் விரட்டுவதற்குரிய மற்றொரு பொருள் கிராம்பு மற்றும் எலுமிச்சை ஆகும். கிராம்பில் இருக்கக்கூடிய யூஜனால் என்ற அமிலம் கொசு மற்றும் பூச்சிகளை கொண்டது. எனவே ஒரு கிராம்பை எடுத்து அதை பாதியாக வெட்டப்பட்ட எலுமிச்சம் பழத்தில் வைத்து வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் அருகில் வைக்கும் போது கொசுக்கள் வருவதை தடுக்க முடியும். கிராம்புக்கு பதிலாக கிராம்பு எண்ணெயும் பயன்படுத்தலாம்.

Kathir

Next Post

சென்னையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையா...? மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

Wed Nov 22 , 2023
சென்னையில் கிண்டி, தியாகராய நகர், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் இடைவிடாத லேசான மழை பெய்து வருகிறது. இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். மேலும் லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது. தொடர்ந்து, விடுமுறை குறித்த முடிவை பள்ளி […]

You May Like