fbpx

கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க போறீங்களா..? வெளியான முக்கிய உத்தரவு..!!

கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என கூட்டுறவுத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், கடந்த அக்.31ஆம் தேதி வரை 8.59 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 81 கோடி உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பு தொடர்புடைய பணிகளுக்காக 2.02 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,085 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் 37,461 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,334 கோடியும், 3,678 கைம்பெண்களுக்கு ரூ.14 கோடியும், 6,052 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.29 கோடியும் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் ரூ.128 கோடி கடனும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காக கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் 29.55 லட்சம் பேருக்கு ரூ.20,953 கோடி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு அமைப்பின் கீழ் 6,762 கடன் வழங்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் விரைந்து கடன் வழங்கும் பணியை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு கூட்டுறவுத் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

நெருங்கும் தீபாவளி..!! தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Fri Nov 10 , 2023
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக இறங்குமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து கிராமுக்கு […]

You May Like