மதுபான கொள்கையில் எந்த ஊழலும் நடக்க இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்…
டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டியும் டெல்லி அரசுக்கு புதிய கொள்கையினால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதில் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்யப்பட்டார்..
அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கெஜ்ரிவாலின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வாரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது . மதுபானக் கொள்கை தொடர்பாக டெல்லி முதல்வரிடம் பேசியது அல்லது அவரைச் சந்தித்தது யார் என்பது குறித்து பிபவ் குமாரிடம் விசாரணை நிறுவனம் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நேற்று சம்மன் அனுப்பி இருந்தது.. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர், அமலாக்கத்துறையும் சிபிஐயும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி, மணிஷ் சிசோடியாவை குற்றம்சாட்டி உள்ளனர்.. அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.. மதுபான கொள்கை தொடர்பாக எந்த ஊழலும் நடக்க இல்லை.. என்ன நடக்கிறது என்று நான் பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன்.. ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து பெற்ற பிறகு எங்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது..” என்று தெரிவித்தார்..