fbpx

என் மச்சான பத்தியே தப்பு தப்பா பேசுறியா…..? சிறுவனை துண்டு துண்டாக வெட்டிய ஆட்டோ ஓட்டுனர்….!

மும்பை அருகே தன்னுடைய மைத்துனர் பற்றி புகார் தெரிவித்ததால், கடுப்பான ஆட்டோ ஓட்டுநர் சிறுவனை துண்டு துண்டாக வெட்டி, கொடூரமான முறையில், கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இருக்கின்ற செம்பூர் பகுதியை சேர்ந்தவர் சபிக் அகமது ஷேக் (33). இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் அவாத் (17) என்பவர் ஷேக்கின் மனைவி மற்றும் சகோதரி உடன் சகோதரனை போல வெகு காலமாக பழகி வந்தார். இந்த நிலையில் தான், திடீரென்று ஈஸ்வர் ஒரு நாள் காணாமல் போனார்.

இது தொடர்பாக ஷேக்கின் மாமனார் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். ஆகவே, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஈஸ்வரை மிகத் தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழ்நிலையில் தான், ஈஸ்வர் இறுதியாக ஷேக்குடன் சென்றார் என்பது தெரிய வந்தது.

இதனால், ஷேக்கை பிடித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ஈஸ்வரை தான் , தான் கொலை செய்ததாக ஷேக் ஒப்புக்கொண்டார். தன்னுடைய மனைவி மற்றும் மைத்துனர் தொடர்பாக, அவர் அடிக்கடி புகார் வழங்கியதால், ஈஸ்வரை குத்தி கொலை செய்ததாக கூறியிருக்கிறார். ஈஸ்வரின் உடல் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்த போது, செம்பூரில் இருக்கின்ற தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஷேக் தெரிவித்த அந்த பகுதியில் சென்று பார்த்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, சமையலறையில், 5 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில், ஈஸ்வர் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஷாபிக் அகமது ஷேக் மீது, 302, 201 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்கப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். இந்த கொடூரமான கொலைக்கு, வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? என்று காவல்துறையினர் தரப்பில், தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

Next Post

திடீரென எகிறிய தங்கம் விலை..!! இப்படியே போச்சுனா என்னதான் பண்றது..? இன்றைய நிலவரத்தை நீங்களே பாருங்க..!!

Thu Aug 31 , 2023
ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்திய நாட்டில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே […]

You May Like