fbpx

காயங்களுடன் சிதைந்து கிடந்த ஆண் சடலம்..!

விக்கிரவாண்டியை அடுத்துள்ள லட்சுமிபுரம் தனியார் கல்லூரி பகுதியில் ஒரத்தூர் கிருஷ்ணகுமார் என்பவரது நிலத்தில் 59 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. 

இதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் இதனை குறித்து விக்கிரவாண்டி போலீஸாருக்கு நேற்று காலை தகவல் அளித்துள்ளனர். 

தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயக்முருகன் எனபவர் சம்பவ இடத்திற்கு சென்று தலை மற்றும் உடலில் காயங்களுடன் கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினார்.

அதில், இறந்தவர் விழுப்புரம் வி மருதூர், கொடித்தெருவை சேர்ந்த முருகன், 59; என்பதும் அவர் மாடு மேய்த்து வருபவர் என்பதும் தெரியவந்தது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் உடலில் காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Rupa

Next Post

BOB வங்கியில் வேலைவாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Sun Jan 8 , 2023
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் FLC Coordinator பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 64 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்புடைய பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 5 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி […]

You May Like