fbpx

திமுக அரசு செய்து வரும் பொய்யான பிரச்சாரம்…! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை எழுதிய கடிதம்…!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்கு 50% பங்குத்தொகையை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2020-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். மத்திய அரசின் நிதி ஒப்புதலை உறுதிப்படுத்தும் முன்பாகவே தமிழக அரசு இத்திட்டத்தை மாநில அரசு திட்டமாகத் தொடங்க முடிவு செய்தது. ரூ.63,246 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், நிதிப் பற்றாக்குறையால், முடங்கி போய் கிடக்கிறது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு மறுக்கிறது என்று திமுக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வேலைகள் நடந்துள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு நிதி அளித்தால் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும் என்பது இப்போது தெளிவாகிறது. இதனை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்கு 50% பங்குத்தொகையை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English Summary

Central Government should consider providing 50% share for Phase 2 of Chennai Metro Rail Project

Vignesh

Next Post

திரையுலகமே ஷாக்!. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

Tue Oct 1 , 2024
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று (செப்டம்பர் 30) மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்ததாகவும் அதற்கான பரிசோதனைகள் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் […]

You May Like