fbpx

#Rain Alert: இன்று தேனி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டத்தில் கனமழை…! வானிலை மையம் கணிப்பு…!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இது தொடர்பாக மாநில மையம் வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Epfo: வரும் 12-ம் தேதி சிறப்பு முகாம்..‌.! வருங்கால வைப்பு நிதி ஆணையர் அறிவிப்பு...!

Wed Sep 7 , 2022
வருங்கால வைப்பு நிதி ஆணையம் வரும் 12-ம் தேதி “உங்கள் அருகில் உங்கள் நிதி” சிறப்பு முகாம் வருங்கால வைப்பு நிதி ஆணையர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், சென்னை வடக்கு மண்டல அலுவலகம், தொழிலாளர்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக, “உங்கள் அருகில் உங்கள் நிதி” முகாமை, வடக்கு மண்டல அலுவலகத்தில் 12 செப்டம்பர் 2022 அன்று நடத்துகிறது. வருங்கால வைப்பு […]

You May Like