சேலத்தை சேர்ந்த கோகிலவாணி என்பவர் அங்குள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்ததாக தெரிகிறது. அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவரோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
திருமணமாகி தம்பதிகள் இருவரும் சில மாதங்கள் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், பின்னர் குடும்பத்திற்குள் பிரச்சனை எழுந்துள்ளது. ஆகவே, அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கோகிலவாணி ஒரு அதிரடி முடிவை மேற்கொள்ள துணிந்தார். அதாவது நமக்குள் பிரச்சனை ஏற்படுகிறது, இனி நாம் ஒன்றாக வாழ வேண்டாம் என்று தன்னுடைய கணவரிடம் தெரிவித்துள்ளார்.
அதாவது, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட பின்னரும் கூட, ஒன்றாக வாழாமல், இருவரும் தனித்தனியே, அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்தனர். அப்படிப்பட்ட நிலையில் தான், இருவருக்கும் திடீரென்று அவ்வப்போது பிரச்சனைகள் எழ தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் கணவரிடம் நாம் இனி சேர்ந்து வாழ வேண்டாம், பிரிந்து விடலாம் என்று கோகிலவாணி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முரளி கிருஷ்ணன், தன்னுடைய மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
திடீரென்று ஒரு நாள் சேலம் ஐந்து வழி சாலையில் தன்னுடைய மனைவியை சந்தித்த முரளி கிருஷ்ணன், அவருடன் பேசியுள்ளார். அப்போது நாம் இருவரும் பிரிந்து விடலாம், அதற்கு முன்பாக பேசி அனைத்து முடிவுகளையும் எடுத்து விடலாம் என்று கூறியுள்ளார் முரளி கிருஷ்ணன்.
அதன் பிறகு தன்னுடைய மனைவியை, இருசக்கர வாகனத்தில் ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று ஆத்திரம் அடைந்த முரளி கிருஷ்ணன், ஸ்குரூ டிரைவரை எடுத்து, கோகிலவாணியின் கழுத்தில் குத்தியுள்ளார். அதன் பிறகு வலியில் துடித்துக் கொண்டிருந்த மனைவியின் மீது, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து, அவர் மீது ஊற்றி, தீ வைத்து கொடூரமான முறையில் எரித்துள்ளார்.
இந்த சம்பவம் முரளி கிருஷ்ணனின் தாய்க்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, உடனடியாக முரளி கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு, காவல் நிலையத்திற்கு சென்று, அவரை ஒப்படைத்தார். இதன் பேரில், காவல்துறையினர் அவர் மீது, கொலை வழக்கு பதிவு செய்து, முரளி கிருஷ்ணனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.