காஸ்மாஸ் வெப் என்ற விண்வெளி ஆய்வினை பற்றிய இணையதளம் ஒன்று ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட சுழல் விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் இணைப்புகளின் சான்று படங்களை வெளியிட்டு இருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மிகப்பெரிய திட்டமான காஸ்மாஸ் வெப்பிலிருந்து புகைப்படங்கள் முதல் முதலாக பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றன. பார்ப்பதற்கே மிகவும் அதிசயமூட்டும் வகையில் நாம் தூரத்திலிருந்து ரசித்த விண்மீன்களின் வித்தியாசமான தோற்றங்கள் விண்மீன் திரள்களின் வித்தியாசமான தோற்றம், ஈர்ப்பு லென்ஸிங் மற்றும் விண்மீன்களின் இணைப்பு போன்ற கேலக்ஸியில் நடக்கும் அற்புதமான விஷயங்களை பொதுமக்களின் பார்வைக்கு முதன் முதலாக கொடுத்திருக்கிறது காஸ்மாஸ் வெப்.
ஆஸ்டினில் அமையப்பெற்றுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் இயற்கை அறிவியல் கல்லூரியின் தகவலின்படி ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் நியர் இன்ஃப்ரா ரெட் மற்றும் மிட் இன்ஃப்ரா ரெட் கேமராக்களின் மூலம் கேலக்ஸி யின் மொசைக் புகைப்படங்கள் கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்டன. இந்தப் புகைப்படங்களும் காஸ்மாஸ் வெப்பின் ஆராய்ச்சியாளர்களின் முயற்சியால் பொதுமக்களின் பார்வைக்கு கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.