fbpx

தினம் தினம் செக்ஸ் டார்ச்சர்..!! கணவரின் அந்தரங்க உறுப்பை மிதித்தும், கடித்தும் கொன்ற மனைவி..!!

தேனி மாவட்டம் போடி ஜீவாநகரை சேர்ந்தவர் ரமேஷ் (47). இவரது மனைவி கிருஷ்ணவேணி (35). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், 1 மகனும், 1 மகளும் இருக்கின்றனர். ரமேஷ் சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். கேரளாவில் ஒரு ஏலக்காய் தோட்டத்தை வைத்து, விவசாய பணிகளை கவனித்து வந்துள்ளார். எனினும், வேலை நிமித்தமாக பெரும்பாலும் கேரளாவிலேயே இவர்கள் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம், தம்பதி இடையே மனக்கசப்பும், கருத்து வேறுபாடுகளும் நிலவிவந்த நிலையில், இது தகராறாகவும் சண்டையாகவும் வெடித்து வந்துள்ளது. இவர்களது மகன் கார்த்திக், போடியில் வீடு எடுத்து தங்கி படித்து வந்துள்ளார். தீபாவளிக்காக தம்பதி இருவரும், மகனை பார்க்க போடி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று திடீரென, அரசு மருத்துவமனைக்கு ரமேஷை அழைத்து வந்திருந்தார் கிருஷ்ணவேணி. வீட்டில் தற்கொலைக்கு ரமேஷ் முயன்றதாகவும், உடனே, விரைந்து சென்று அவரை காப்பாற்றியதாகவும் கிருஷ்ணவேணி பதறிப்போய் சொன்னார்.

ஆனால், உயிருக்கு ஆபத்தான நிலையில்தான், கிருஷ்ணவேணி அவரை கொண்டுவந்திருந்தார். எனினும் மருத்துவர்கள் போராடி பார்த்தும், ரமேஷை காப்பாற்ற முடியவில்லை. அவரது கழுத்து, மூக்கு, தோள்பட்டை என பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன. அதிலும், மர்ம உறுப்பில் இன்னும் பலமான காயங்கள் காணப்பட்டன. உடலில் நகக்கீறல்களும் நிறைய இருந்தன.

இதையெல்லாம் பார்த்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தது. போலீசாரும் விரைந்து வந்து சடலத்தை பார்வையிட்டனர். இதற்கிடையே, ரமேஷின் தாய் அழகம்மாள், மகனின் மரணத்தில் சந்தேகத்தில் இருப்பதாக புகார் அளித்ததை அடுத்து, போலீசாரின் விசாரணை வளைத்துக்குள் கொண்டுவரப்பட்டார் மனைவி கிருஷ்ணவேணி.

விசாரணையில், தினமும் கிருஷ்ணவேணிக்கு பாலியல் தொல்லை தந்து வந்தாராம் ரமேஷ். ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால், தொடர்ந்து அதற்கு மறுப்பு சொல்லியும், ரமேஷ் கேட்கவில்லையாம். தினம் தினம் டார்ச்சர் அதிகமாகி உள்ள நிலையில், சம்பவத்தன்றும் கிருஷ்ணவேணியிடம் உறவுகொள்ள முயன்றிருக்கிறார் ரமேஷ். அப்போது, அவரை கோபத்தில் தாக்கி கீழே தள்ளிவிட்டு, கடுமையாக தாக்கியிருக்கிறார்.

அப்போதும் ஆத்திரம் அடங்காமல், மர்ம உறுப்பை மிதித்தும், கடித்தும் கொன்றிருக்கிறார் கிருஷ்ணவேணி. அனைவரையும் நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுபோல நாடகமாடியுள்ளார். இவ்வளவும் போலீசாரிடம் வாக்குமூலமாக தந்துள்ளார் கிருஷ்ணவேணி. கணவரின் உடம்பெல்லாம் ரத்தக்கீறல்களும், காயங்களும், மனைவியை காட்டிக் கொடுத்துள்ள நிலையில், கிருஷ்ணவேணியை சிறையில் தள்ளியுள்ளனர் காவல்துறையினர்.

Chella

Next Post

சர்ச்சையில் சிக்கிய நடிகர் தனுஷின் மகன்..!! இன்னும் 18 வயதே ஆகல..!! அதுக்குள்ள இப்படியா..?

Thu Nov 16 , 2023
நடிகர் தனுஷ் நடிப்பில் ஒருபக்கம் பிஸியாக இருக்க, ஐஸ்வர்யா இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகர் தனுஷின் மகன் பைக் ஓட்டக் கற்றுக் கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் காதல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து […]

You May Like