மக்கள் மருந்தகங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
இம்மருந்தகங்களில் குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், அதிக விலையுடைய மருந்துகளை வாங்கும் நெருக்கடியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மொத்தம் 1,759 மருந்துகளும், 280 அறுவைச் சிகிச்சை உபகரணங்களும் இதில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் மக்கள் மருந்தகங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.