fbpx

அசத்தும் இந்தியா…! வெடிமருந்து, டார்பிடோ ஏவுகணை படகு…! கடற்படையிடம் ஒப்படைப்பு..!

இந்தியக் கடற்படைக்காக, தானேயில் உள்ள எம்எஸ்எம்இ ஷிப்யார்ட், திருவாளர்கள் சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட, ஏசிடிசிஎம் படகு 11 திட்டத்தின் ஒரு பகுதியாக ‘வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ ஏவுகணை படகு, எல்எஸ்ஏஎம் 18., மும்பையில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் (கரன்ஜா) ஒப்படைக்கப்பட்டது.

11 ஏசிடிசிஎம் படகு கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தானேவில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இடையே 2021, மார்ச் 05 அன்று கையெழுத்தானது. இந்தப் படகுகளை சேர்ப்பது, துணைத் துறைமுகங்கள் மற்றும் வெளிப்புற துறைமுகங்களிலிருந்து வெடிபொருட்கள் / தளவாடங்கள் ஆகியவற்றை இந்தியக் கப்பற்படைக்கு கொண்டு செல்லுதல், இறக்குதல், ஆகியவற்றை எளிதாக்கும். இது இந்தியக் கடற்படையின் செயல்பாட்டுக் கடமைகளுக்கு உத்வேகம் அளிக்கும்.

இந்தப் படகுகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு,தொடர்புடைய கடற்படை விதிகள் மற்றும் இந்திய கப்பல் பதிவேட்டின் ஒழுங்குமுறைகளின் கீழ் கட்டப்பட்டவை. வடிவமைப்பு கட்டத்தில் படகின் மாதிரி சோதனை விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் இந்தியாவில் உற்பத்தித் திட்டத்தின் பெருமைமிகு அடையாளங்களாக இந்தப் படகுகள் திகழ்கின்றன.

Vignesh

Next Post

ராம்ஜான் பண்டிகை..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!! மாணவர்கள் ஷாக்..!!

Sat Mar 30 , 2024
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 4 முதல் 9ஆம் வகுப்பு இறுதி தேர்வு அட்டவணையில் அரசு செய்துள்ள மாற்றங்களை பார்ப்போம். லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்துவிட்டது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது தேர்வு நடந்து வருகிறது. ஒன்று முதல் […]

You May Like