சில நாடுகளில் பெருமழை பெய்து வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் போதிய மழையே இல்லாமல் பெரும் வறட்சி ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஆப்ரிக்க நாடுகளில் போதிய மழை பெய்யாததால் இந்த ஆண்டிலும் அந்த பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் உலகின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரி இருக்கின்ற கென்யாவையும் இது விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை.
இந்த சூழ்நிலையில் கென்ய காடுகளில் உள்ள பல விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் சுமாராக 512 காட்டெருமைகள், 205 யானைகள், 12 ஒட்டக சிவிங்கி, 381 வரிக்குதிரைகள் போன்ற பல்வேறு வகை அரிதான விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெறிவித்துள்ளது.
ஆப்ரிக்க காடுகளில் ஏற்கனவே வேட்டை போன்ற பல காரணங்களால் யானைகளின் எண்ணிக்கைகள் கடுமையாக குறைந்து கொண்டு வந்த நிலையில், தற்போது நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, இனி வரும் காலங்களில் பருவநிலைகளில் ஏற்படும் மாற்றம் இன்னும் மோசமான பாதிப்புகளை உருவாக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளர். அதனை எதிர்கொள்ள உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா அமைப்பு கூறியுள்ளது.