fbpx

இரவு நேர உணவை இந்த நேரத்திற்குள் முடித்து விட வேண்டும்….! இல்லையென்றால் பிரச்சினை தான்….!

சிலர் பணி நிமித்தம் காரணமாக, இரவு வெகு நேரம் ஆன பிறகு சாப்பிடுவார்கள். ஆனால், ஆரோக்கியமான உடல் நலத்திற்கு இரவு 7 மணிக்கு சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் அது சாத்தியமில்லாத சூழ்நிலை காணப்பட்டாலும், அதனை முடிந்தவரையில் கடைபிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஏழு மணிக்கு முன்பாக சாப்பிட்டுவிட்டால், ஜீரணம் ஆவதற்கான நேரம் கிடைக்கும் என்றும், தாமதமாக சாப்பிட்டு, அதிகாலை மிக விரைவாக எழுந்தால் ஜீரணம் ஆவதற்கான நேரம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

அத்துடன், இரவில் தாமதமாக சாப்பிடுவதால், உணவு ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், உறக்கத்திற்கு இடையூறு உண்டாகும். ஆழ்ந்த உறக்கத்தை பெற இயலாத சூழ்நிலை உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு, உறங்குவதற்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்திற்கு முன்பாக, உணவு சாப்பிட்டால்தான் சர்க்கரை அளவு சரியாக இருக்கும் எனவும், அதன் மூலமாக நீரிழிவு நோயை தடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. முடிந்தவரையில் குடும்பத்தோடு, இரவு உணவை சாப்பிடும் வழக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

Next Post

’இந்த வார்த்தையை உதயநிதி தனது அம்மாவிடம் சொல்லியிருந்தால்’..!! ’பளார் பளார் தான்’..!!

Sat Sep 9 , 2023
தேனி மாவட்டம் கம்பம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணத்தை முடித்துவிட்டு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ”கம்பம் பள்ளத்தாக்கில் சுவையான திராட்சை விவசாயம் லட்சக்கணக்கான ஏக்கரில் நடைபெற்று வருகிறது. ஆனால், தண்ணீர் தட்டுப்பாடு தான் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அது குறித்து வாய் திறக்கவே இல்லை. கேரள அரசு கம்பம் பகுதியை குப்பை மேடாக பயன்படுத்தி வருகிறது. கேரள […]

You May Like