fbpx

சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆசையா..? இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் இன்று முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கி, ஜன.15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. ரயிலில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி., (IRCTC) இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் முன்பதிவு விவரங்கள் :

  • செப்டம்பர் 13ஆம் தேதி (இன்று) முன்பதிவு செய்வோர் ஜனவரி 11ஆம் தேதி பயணிக்கலாம்.
  • செப்டம்பர் 14ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ஆம் தேதி பயணிக்கலாம்.
  • செப்டம்பர் 15ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணிக்கலாம்.
  • செப்டம்பர் 16ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14ஆம் தேதி பயணிக்கலாம்.
  • செப்டம்பர் 17ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ஆம் தேதி பயணிக்கலாம்.
  • செப்டம்பர் 18ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ஆம் தேதி பயணிக்கலாம்.
  • செப்டம்பர் 19ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 17ஆம் தேதி பயணிக்கலாம்.

Chella

Next Post

எச்சரிக்கை...! வெளிச்சந்தையில் ரேஷன் பொருள் விற்பனை...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Wed Sep 13 , 2023
ரேஷன் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து […]

You May Like