fbpx

காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் பிஸ்கட் சாப்பிடுவதால், உடல் எடை அதிகரிக்குமா….?

இன்று நாம் அனைவரும் காலையில் எழுந்தவுடன் டீ மற்றும் பிஸ்கட் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், பலருக்கும் காலை எழுந்தவுடன் டீ குடிக்காவிட்டால், அன்றைய நாள் தொடங்கியது போலவே தெரியாது.

அதேபோல, இந்த டீ குடிப்பதால், பசி எடுப்பது குறைவாக தெரியும். ஆகவே காலை உணவை சற்றே இடைவேளை விட்டு சாப்பிடலாம். ஆனால், இரவு முழுவதும் வெறும் வயிராக இருக்கும்போது, காலை எழுந்தவுடன் பிஸ்கட் சாப்பிடுவது செரிமான பிரச்சனையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பிஸ்கட்டுகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவின், உயர் கிளைசெமிக் ஒருவருடைய ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கலாம். உப்பு சேர்க்கப்பட்ட பிஸ்கட்டுகள் உங்களுடைய இரத்த அழுத்த அளவை அதிகரிக்கலாம்.

வெண்ணெய் சேர்க்கப்பட்ட பட்டர் பிஸ்கட்டுகள் உங்களுடைய கொழுப்பின் அளவை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. பச்சை மாவு, பாக்டீரியா தொற்று பாதிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகள், உணவு குறித்த ஒவ்வாமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

செயற்கையான சுவையூட்டைகள் கொண்ட பிஸ்கட்டுகள், உடலில் கலோரிகளை அதிகரிப்பதால், உடல் எடை வேகமாக அதிகரிப்பதற்காக வாய்ப்பிருக்கிறது. காலை நேரத்திலேயே தண்ணீர் சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு 15 நிமிடங்கள் இடைவேளைக்கு பிறகு, எந்த உணவையும் சாப்பிடுவது நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

Next Post

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்!… மிஸ் பண்ணிடாதீங்க!… முழுவிவரம் இதோ!

Wed Sep 13 , 2023
சென்னையில் அக்டோபர் 9ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. aukri.com, NHRD சென்னை, NHRD புனே மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஆகியவற்றுடன் இணைந்து எபிலிட்டி பவுண்டேஷன் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. குறைந்த பட்சம் பட்டதாரியான மாற்றுத்திறனாளி எவரும் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துகொள்ளலாம் எனவும், மேலும், இதற்கான பதிவு இலவசம் என்றும், பதிவு செய்வதற்கான கடைசி தேதி 25 செப்டம்பர் 2023 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like