ஹரியானா மாநிலத்தில், தன்னுடைய பெண் தோழி ஒருவர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில், வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதால், தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த விக்ரம் என்பவருக்கும், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்ஷி என்பவருக்கும் இடையே, நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விக்ரமுக்கு ஏற்கனவே, திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் ஆகியோர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான், விக்ரம் தன்னுடைய பெண் தோழியுடன், அடிக்கடி, சொகுசு விடுதி, கடற்கரை என்று பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளார். அதுவே பின்னாளில் அவருடைய உயிருக்கு ஆபத்தாகிவிட்டது.
வழக்கம்போல, விக்ரம் நேற்று தன்னுடைய பெண் தோழியோடு, ஒரு சொகுசு விடுதிக்கு சென்றுள்ளார். அங்கே இருவரும் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்பு அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்ட ஆன்ஷி, பின்னர் விக்ரமிடம் அந்த வீடியோவை காட்டி எனக்கு பணம் தரவில்லை என்றால், இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், விக்ரம் அந்த ஹோட்டல் அறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடைய மனைவி நீரூவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பின்னர், இந்த விவகாரம் குறித்து விக்ரமின் மனைவி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அவர் வழங்கிய புகாரில், விக்ரமின் பெண் தோழிதான், அவருடைய தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், அவர் பல அதிர்ச்சி தகவலையும் அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். அதாவது, இதற்கு முன்பாகவே பலமுறை விக்ரமின் பெண் தோழி விக்ரமை மிரட்டி உள்ளதாக கூறியிருக்கிறார் விக்ரமின் மனைவி.
ஆகவே விக்ரமின் மனைவி வழங்கிய புகாரின் மீது நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், விக்ரமின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக கூறப்பட்ட அவருடைய பெண் தோழியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
.
.