fbpx

நான் சொல்றத கேக்க மாட்டியா….? மாமனார் வீட்டில் வரதட்சணை கேட்க மறுத்த கர்ப்பிணி மனைவியை, கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர கணவன்….!

பொதுவாக காதல் திருமணம் என்றால், ஆண்கள் யாரும் பெரும்பாலும் வரதட்சணையை எதிர்பார்ப்பதில்லை. மாறாக, தான் காதலித்த பெண்ணை கரம் பிடித்தால் போதும் என்று நினைப்பார்கள். இதுதான் பொதுவாக காதலர்களின் நினைப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலர், அந்த காதல் மூலமாக தங்களுடைய அடுத்த கட்ட வாழ்க்கைக்கு அடித்தளமிட நினைக்கிறார்கள்.

அப்படி அவர்கள் நினைக்கும் நினைப்புக்கு தன்னுடைய காதலியோ, மனைவியோ தடையாக இருந்தால், அவர்களை கொலை செய்யவும் தயங்குவதில்லை. அது போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.

அதாவது, கர்நாடக மாநிலத்தில், கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல், மாமியார் வீட்டில் வரதட்சணை கேட்க மறுத்ததால், தன்னுடைய காதல் மனைவியை பிளேடால் கொடூரமாக கழுத்தை அறுத்து, ஒரு இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மைசூர் மாவட்டம், சாமலாப்பூர் உண்டி கிராமத்தை பூர்விகமாக கொண்ட சோபா, மஞ்சுநாதன் தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த தம்பதிகள் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் சோபா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். பொதுவாக, மகள்கள் மீது பெற்றோர்கள் எவ்வளவு தான் கோபமாக இருந்தாலும், பேரப்பிள்ளைகள் வந்துவிட்டால், அந்த கோபம் எல்லாம் சென்ற இடம் தெரியாமல் போய்விடும். பெற்ற மகன் மற்றும் மகளை விட பேரப்பிள்ளைகள் மீது, தாத்தா, பாட்டிகள் வைக்கும் பாசத்திற்கு ஆயுள் அதிகம் என்று சொல்வார்கள். அதனை தன்னுடைய ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு சோபாவின் வீட்டில் இருந்து, வரதட்சணை வாங்க முயன்றுள்ளார் மஞ்சுநாத்.

இது பற்றி மஞ்சுநாத் தன்னுடைய மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும், இதற்கு சோபா கடுமையான மறுப்பை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கடும் வாக்குவாதத்திற்கு இடையே கோபமடைந்த மஞ்சுநாத், தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கர்ப்பிணி மனைவி என்று கூட பார்க்காமல், அவருடைய கழுத்தை அறுத்து, கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

இதனால், ஏற்பட்ட வலியால் ஷோபா கதறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு, அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஓடி வந்து, ஷோபாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் மஞ்சுநாத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதற்கு நடுவே, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷோபா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே, காவல்துறையினர் தரப்பில், மஞ்சுநாத் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Post

”நான் யாருன்னு நினைச்ச”..!! ”ஒரு ஓட்டு வாங்க முடியாது”..!! ”ஆம்பளையா இருந்தா தனியா வா”..!! சீமானை எச்சரித்த வீரலட்சுமி..!!

Sun Sep 17 , 2023
தாம் நினைத்தால் வட மாவட்ட எல்லையில் சீமானால் கால் வைக்கவே முடியாது என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விஜயலட்சுமியின் ஆதரவாளர் வீரலட்சுமி, ”நான் ஜாதி மறுப்பாளன். என்னை நாயுடு நாயுடு என்று சொல்வதால் என் ஜாதி சான்றிதழை நான் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திரும்ப திரும்ப வதந்தியை பரப்பினால் நான் என் ஜாதியை திரும்ப திரும்ப சொல்ல வேண்டியதுதான் […]

You May Like