fbpx

’எடப்பாடியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது’? – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக பொதுக்குழுவை ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து தான் கூட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பட்டியலிடப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு கடந்த 10 மற்றும் 11ஆம் தேதிகளில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று வழங்கினார்.

சென்னை உயர்நீதிமன்றம்

அதில், ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், அதிமுக பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் கூட்ட வேண்டும் என்றும் தனி கூட்டம் கூட்டக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

”மற்றவர்கள் பிரச்சனையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை”..! - சபாநாயகர் அப்பாவு

Wed Aug 17 , 2022
”அதிமுக விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் தான் இருக்கிறோம்” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ”16வது சட்டப்பேரவையின் நடவடிக்கை குறிப்புகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. அதிமுக தரப்பில் கடிதங்கள் வருவதற்கு முன்னரே நீங்களே செய்தியை போட்டுவிடுகிறீர்கள். அதிமுக உட்கட்சி பிரச்சனை ஒன்னும் அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை அல்ல. சட்டமன்ற அதிமுக துணைத்தலைவர்? விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவரே […]
அதிமுக துணைத் தலைவர் விவகாரம்..! முடிவுகள் எப்படி இருக்கும் தெரியுமா..? அப்பாவு பரபரப்பு பேட்டி

You May Like