fbpx

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்!… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!

புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று ஆகஸ்ட் 26ம் தேதி புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியிலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 26ஆம் தேதி ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்வி சான்றுகளில் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை கட்டாயம் எடுத்து வர வேண்டும் எனவும் இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

மத்திய அரசு அதிரடி...! இனி ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை...!

Sat Aug 26 , 2023
ஊடக நிறுவனங்கள், ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட பிரிவினர்களையும், எந்தவொரு வடிவத்திலும் பந்தயம், சூதாட்டம் குறித்த விளம்பரங்களை தவிர்க்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுரையைக் கடைப்பிடிக்கத் தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூதாட்ட மற்றும் பந்தய தளங்களின் விளம்பரங்கள் நுகர்வோருக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு, நிதி மற்றும் சமூகப்பொருளாதார ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதை […]

You May Like