fbpx

சிறுவன் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட பொறியாளர்….! வெளியான பகீர் காரணம்….!

வாய் பேச முடியாத மகனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்த தந்தை, மகன் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் குடிநீரில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவராமன். இவர் பெங்களூரில் இருக்கின்ற விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு, வசந்தா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இவருடைய இரண்டாவது மகன் திலக் சென்னையில் உள்ள, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான், இரண்டாவது மகனான திலக், அவருடைய மனைவி மகேஸ்வரி மற்றும் 6 வயது வாய் பேச இயலாத மகன் உள்ளிட்டோருடன் சிவராமனும், வசந்தாவும் வசித்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

வாய் பேச முடியாத தன்னுடைய மகனுக்கு அவ்வப்போது உடல் நல குறைவு ஏற்பட்டதால், திலக் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்திருக்கிறார். இதனால், குடும்பத்தோடு, தற்கொலை செய்து கொள்ள அவர் முடிவு செய்தார். ஆகவே, வீட்டில் இருந்த தாய், தந்தை, மகன் மற்றும் மனைவி உள்ளிட்ட எல்லோருக்கும், குடிநீரில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டார். மேலும், அவரும் மாடியில் இருக்கின்ற ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மனைவி மகேஸ்வரி தன்னுடைய சகோதரருக்கு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸப் மூலமாக குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தார்.

இதைக் கண்ட மகேஸ்வரியின் சகோதரர், உடனடியாக மகேஸ்வரியின் அண்டை வீட்டில் வசிப்பவர்களுக்கு போன் செய்து, மகேஸ்வரியின் வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, உடனடியாக அண்டை வீட்டார் வந்து பார்த்தபோது, சிவராமன், திலக், மகேஸ்வரி மற்றும் அவருடைய ஆறு வயது மகன் உள்ளிட்டோர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்தனர். அவருடைய தாய் வசந்தா மயக்க நிலையில் இருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

Jailer | புதிய சிகரம் தொட்ட ’ஜெயிலர்’..!! இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

Thu Aug 24 , 2023
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆக.10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் என பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியான நாளில் இருந்து இன்று வரை உலகளவில் ரூ. 540 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் […]

You May Like