fbpx

கல்லூரி பேருந்துக்குள் மாணவி-பேராசிரியை இடையே குடுமிப்பிடி சண்டை..!! சென்னையில் பயங்கரம்..!! வீடியோ வைரல்

சென்னை தனியார் கல்லூரியின் பேருந்துக்குள் மாணவிக்கும், பேராசிரியைக்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த செம்ஞ்சேரியில் தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவிகள் எப்போதும் அடையாள அட்டையை (ஐடி கார்டு) கழுத்தில் மாட்டியிருக்க வேண்டும் என்பது கல்லூரியின் விதிமுறை. அவ்வாறு ஐடி கார்டு அணியாத மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கல்லூரி பேருந்துக்குள் மாணவி-பேராசிரியை இடையே குடுமிப்பிடி சண்டை..!! சென்னையில் பயங்கரம்..!! வீடியோ வைரல்

இந்நிலையில், நேற்று இந்தக் கல்லூரிப் பேருந்தில் மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மாணவி அருகில் அமர்ந்திருந்த ஆசிரியை மட்டும் ஐடி கார்டு அணியாமல் இருந்துள்ளார். இதை கவனித்த மாணவி அந்த ஆசிரியையிடம் கேள்வி எழுப்பி பிரச்சனை செய்துள்ளார். “மாணவர்களை மட்டும் ஐடி கார்டை அணிய சொல்கிறீர்கள்.. நீங்கள் ஏன் அணியவில்லை” என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கல்லூரி பேருந்துக்குள் மாணவி-பேராசிரியை இடையே குடுமிப்பிடி சண்டை..!! சென்னையில் பயங்கரம்..!! வீடியோ வைரல்

பின்னர் இருவரும் பேருந்துக்குள்ளேயே ஒருவரின் ஒருவர் முடியை பிடித்து கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இதையடுத்து, மாணவர்கள் இருவரையும் விலக்க விட்டனர். இதனிடையே, இந்த மாணவி – பேராசிரியை சண்டையை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்த மாணவர்கள், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த மக்கள், அந்த மாணவியை கடுமையாக திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த மாணவி மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஏமாற்றம்...! நியூசிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக தடை...!

Sun Nov 27 , 2022
நியூசிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக தடை செய்யப்பட்டது ‌‌. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் முதல் போட்டி இங்லாந்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்க்கு 306 ரன்களை எடுத்தது இந்தியா. அதிக […]

You May Like