கர்நாடக மாநில பகுதியில் உள்ள சிக்காபல்லாபூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ரயில்வே தண்டவாளத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.
இது பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் உயிரிழந்தவர்கள் மைலரப்பா என்பவர் மற்றும் இவரது மனைவி புஷ்பலதா அவர்களின் மகள் தாக்ஷாயினி என்பது தெரியவந்துள்ளது.
மைலராப்பா கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இறப்பதற்கு முன் எழுதியிருந்த கடிதத்தில், ரேஷன் அரிசியில் எங்களுக்கு ப்ளாஸ்டிக் அரிசி தான் வழங்கினார்கள். எங்களின் மீது எந்த ஒரு தவறுமில்லை.
மேலும் எங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.