fbpx

செக்யூரிட்டி முன்னிலையில் கூட்டுப் பாலியல் பலாத்காரம்…..! மனமுடைந்த இளம் பெண் எடுத்த விபரீத முடிவு….!

பகுதி நேர செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த 19 வயது இளம்பெண் ஒருவர், செக்யூரிட்டி முன்பாகவே, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்ற காஜியாபாத்தில் அவருடைய அத்தையுடன் வசித்து வருகிறார். அத்துடன், காஜியாபாத்தில் இருக்கின்ற அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த இரண்டு மாதங்களாக அவர் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தான், நேற்று முன்தினம் செக்யூரிட்டி ஆபிஸர் முன்னிலையில், அந்த இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே மனமுடைந்த அந்த இளம் பெண், அவரது வீட்டில் விஷம் குடித்த நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்த நபர்கள், உடனடியாக, அவரை மீட்டு, உத்திரப்பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனாலும், அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜிங் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த நிலையில் தான், அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டி அதிகாரி மேற்பார்வையில், மூன்று இளைஞர்களால், அந்த இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், ஆனாலும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் எனவும் காவல் துறையிடம் அந்த இளம் பெண்ணின் அத்தை புகார் வழங்கியிருக்கிறார். இந்த குற்றம் குறித்து, அஜய் (32) என்பவரை காவல் துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, செக்யூரிட்டியின் அத்தை வழங்கிய புகாரின் அடிப்படையில், மேற்பார்வையாளரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அங்கே அவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களின் பெயரையும் கூறி இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் நீதிபதியின் முன்னிலையில், அந்த இளம் பெண்ணின் வாக்குமூலத்தை நாங்கள் பதிவு செய்தோம் என்றும், ஆனால், அந்த பெண்ணால், பேச முடியாமல் போனதால், நீதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் வழங்கினார். அந்த வாக்குமூலத்தில், தன்னுடைய செக்யூரிட்டி மேற்பார்வையாளரின் பெயரை மட்டுமே அவர் குறிப்பிட்டு இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்கள் காவல்துறையினர். மேலும், இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ஜாமினில் வெளியே வந்துட்டா உன்ன விட்ருவோமா….? ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட நபர், திருநெல்வேலி அருகே பரபரப்பு சம்பவம்….!

Tue Aug 29 , 2023
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, சிறைக்கு சென்று, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த ஒருவரை, ஒரு கூலிப்படை கும்பல் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் சேரன்மகாதேவியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேரன்மகாதேவி பகுதியில் வசித்து வரும் கணேசனுக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும், அவர் சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் தான், ஒரு வழக்கு குறித்து, திருநெல்வேலிக்கு சென்ற […]

You May Like