fbpx

Bihar | பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து.!! 6 பேர் பலி.!! 30 க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு.!!

Bihar: இன்று மதியம் பீகார் மாநில தலைநகர் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட டிவி பத்து அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . தீயணைப்புத் துறையினர் போராடி விரைவாக தீயை அணைத்ததால் மிகப்பெரிய அளவிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கிறது .

பாட்னாவில் உள்ள கோட்வாலி காவல் நிலையப் பகுதியில் உள்ள கோலம்பர் அருகே உள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதிகாரிகள் தீயை அணைத்ததாகவும், காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பாட்னா தீயணைப்பு துறை டிஐஜி மிருத்யுஞ்சய் குமார் தெரிவித்தார். மேலும் இந்த கொடூர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

https://twitter.com/ANI/status/1783384344549294357?t=ZbzJqEM0mjPIMPmDz7oYBg&s=19

தீயணைப்புத் துறை வீரர்கள் விரைவாக செயல்பட்டு வேகமாக பரவிய தீயை அணைத்தனர். இதனைத் தொடர்ந்து மீட்பு பணியில் இறங்கிய தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் ஹோட்டலில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மக்கள் கூட்டம் நிறைந்த அந்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Read More: CM Yogi | “இந்தியாவை இஸ்லாமிய மயமாக்கும் காங்கிரஸ்…” யோகி ஆதித்யநாத் பரபரப்பு குற்றச்சாட்டு.!!

Next Post

இந்த மாதிரி AC-யை பயன்படுத்தினால் கரண்ட் பில் அதிகம் வராது..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!

Thu Apr 25 , 2024
வெயில் காலம் வந்த உடன் உடலில் நீர் சத்து வெளியேறுவதை தடுக்கவும், உடல் வெப்ப நிலையை குறைக்கவும் நாம் பல்வேறு விஷயங்களை செய்கிறோமோ, அதுபோல் வெயில் காலம் வந்தால் மின்சாரம் வழக்கத்தைவிட 3 மடங்கு அதிகம் ஆக வாய்ப்பு உள்ளது. ஏசி, ஃபேன், பிரிட்ஜ் பயன்பாடு போன்றவை அதிகமாக இருக்கும் என்பதால் மின் கட்டணம் அதிகமாகும் வாய்ப்புள்ளது. எனவே வெயில் காலத்தில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு சில […]

You May Like