நான்கு வருட காலமாக தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்த காதலிக்கு நான்கு முறை கருக்கலைப்பு செய்து, கடைசியாக 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய காதலனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த 26 வயத இளம்பெண் ஒருவர், இன்டீரியர் டிசைனராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு, ரத்தினபுரியைச் சேர்ந்த பரத் (30) என்ற இளைஞருடன் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டது. பரத் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில், காதலாக மாறியுள்ளது. இதனால், வீட்டை விட்டு வெளியேறி, அந்த இளம் பெண் திருமணம் செய்து கொள்ளாமலேயே பரத்துடன் வாடகை வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இதன் காரணமாக, அந்த இளம் பெண் பலமுறை கர்ப்பம் அடைந்துள்ளார்.
ஆனால் பரத் குழந்தை வேண்டாம் என்று தெரிவித்து, கட்டாயப்படுத்திய சூழ்நிலையில், அந்த இளம் பெண் கடந்த நான்கு வருட காலத்தில் நான்கு முறை கரு கலைப்பு செய்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான், அந்த இளம் பெண்ணிடம் பரத் சொந்தமாக ஐடி தொழில் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
சொந்தமாக ஐடி தொழில் செய்தால், லாபம் அதிகரிக்கும் என்று ஆசை வார்த்தை தெரிவித்துள்ளார். இதற்காக அந்த பெண்ணிடம் பலமுறை தொழில் வளர்ச்சிக்காக பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான், பரத்தின் தாயார் சாந்தி, அந்த இளம் பெண்ணிடம் உங்களுக்கு திருமணம் செய்து வைக்க எனக்கு சம்மதம் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு முன்பு 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லையென்றால், என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விடுவேன் என்று கூறி, அந்த இளம் பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது.
அதோடு, பரத்திற்கு மூன்று இடங்களில் பெண் பார்த்து வைத்திருப்பதாகவும், அந்த இளம் பெண்ணை அழைத்து இனி லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ இயலாது. ஆகவே இருவரும் திருமணமும் செய்து கொள்ள இயலாது என்று மிரட்டி இருக்கிறார். இதன் காரணமாக, விரக்தி அடைந்த இளம் பெண், இது தொடர்பாக புகார் வழங்கியிருக்கிறார். அந்த புகாரின் அடிப்படையில், பாரத் மற்றும் அவருடைய தாயார் மீதும் உறவினர்களான அருண், ராணி, தினகரன் உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் காதல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.